ரியல்மி நிறுவனமானது இந்தியாவில் இதுவரை ரியல்மி 1, ரியல்மி சி1, ரியல்மி 2 மற்றும் ரியல்மி 2ப்ரோ உள்ளிட்ட 4 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ரியல்மி ஸ்மார்டபோனின் விலையை உயர்த்துவதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் சேத் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளிக்கு பின்னர் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என அவர் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ப்ளிப்கார்ட்டில் தற்போது ரியல்மி மொபல்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனமானது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி நினைவகத்தை கொண்ட ரியல்மி 2 ஸ்மார்டபோனை ரூ.8,990 விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த விலை உயர்வுக்கு பின்னர் ரூ.9,499க்கு வாங்க உள்ளனர்.
ஆனால், இதில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி நினைவகம் வேரியண்டின் விலையில் எந்த மாறுபாடும் இல்லை. இது ரூ.10,990 விலையில் ப்ளிப்கார்ட்டில் விற்பனையாகி வருகிறது. இருப்பினும் வரும் காலங்களில் 4 ஜிபி வேரியண்ட்டின் விலை உயருமா என்பது இனிதான் தெரிய வரும்.
ரியல்மி சி1 ஸ்மார்ட்போனானது செப்டம்பரில் வெளியான போது ரூ.6,999 இருந்தது. ஆனால் தற்போது அதன் விலை ரூ.1000 ரூபாயை உயர்த்தியுள்ளது.
டூயல் சிம் கொண்ட ரியல்மி 2 ஸ்மார்ட்போனானது ஆண்டுராய்டு 8.1 ஒரியோவில் இயங்குகிறது. 6.2 இன்ச் எச்.டி + (720x1520 பிக்செல்ஸ்) கொண்டுள்ளது. அக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 உடன் அடிரினோ 506 ஜிபியு மற்றும் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
இந்த போன் டூயல் பின்பக்க கேமரா 13 மெகா பிக்ஸெல்ஸ் பிரைம் சென்சார் f/2.2 அப்பர்செர் மற்றும் 2 மெகா பிக்ஸெல்ஸ் செகண்டரி சென்சார் கொண்டுள்ளது.
ரியல்மி 2 போன் 32 ஜிபி நினைவகம் மற்றும் 64 ஜிபி நினைவகம் கொண்ட போனானது SD கார்டு கொண்டு 256 ஜிபி நினைவகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. மேலும், இது 4,2300mAh பேட்டரி மற்றும் 156.2x75.6x8.2mm கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்