ரியல்மி, Realme 2 Pro போனுக்கான புதிய மென்பொருளை இந்தியாவில் வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த அப்டேட், Realme 2 Pro-வுக்கான ஜனவரி 2020 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. மேலும், மூன்று புதிய அம்சங்கள், சமீபத்தில் Realme X2 Pro மற்றும் Realme 5 Pro போன்ற போன்களில் சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்திய Realme 2 Pro அப்டேட், notification centre-ல் ஒரு dark mode toggle, புதிய UI சைகை, மேலும் உள்வரும் அழைப்புகளுக்கான ஃபிளாஷ் notification அம்சத்தையும் செயல்படுத்துகிறது.
இந்த அப்டேட், RMX1801EX_11_C.26 என்ற உருவாக்க எண்ணைக் கொண்டுள்ளது. மேலும், அதிகாரப்பூர்வ Realme சமூக மன்ற பதிவின் படி, இது ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படுகிறது. எனவே, நீங்கள் இதுவரை அப்டேட்டை பெறவில்லை என்றால், அடுத்த சில நாட்களில் வரும். இந்தியாவில், OTA அப்டேட் அறிவிப்பைப் பெறாத Realme 2 Pro பயனர்கள், Settings app-ல் மென்பொருள் அப்டேட் பிரிவில் அதன் இருப்பை சரிபார்க்கலாம்.
Realme 2 Pro, notification centre-ல் ஒரு dark mode fast switch toggle உடன் ஜனவரி பாதுகாப்பு பேட்சை சமீபத்திய மென்பொருள் அப்டேடுடன் பெறுகிறது. இந்த அப்டேட் ஒரு புதிய சைகையை அறிமுகப்படுத்துகிறது. இது task switcher interface-ல் உள்ள வெற்றுப் பகுதியைத் பயனர்கள் tap செய்யவும், நேரடியாக துவக்கி முகப்புப்பக்கத்திற்கு (homepage) செல்ல அனுமதிக்கிறது. கூடுதலாக, இது உள்வரும் அழைப்பு ஃபிளாஷ் அறிவிப்பு (notification) அம்சத்தையும் செயல்படுத்துகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்