Qualcomm நிறுவனம் கைமாறினாலும் 'பணியாளர்களுக்கு' கவலை இல்லை!

விளம்பரம்
Written by Anders Melin, Bloomberg மேம்படுத்தப்பட்டது: 8 ஜூன் 2018 16:15 IST
ஹைலைட்ஸ்
  • Qualcomm-ன் உயரிய பதவியில் இருப்பவர்களுக்கும் இழப்பீடு தொகை உண்டு
  • வருடாந்திர போனஸும் சேர்த்துத் தரப்படும்
  • இதற்கு முன்னர் உயரிய பதவியில் இருந்தவர்களுக்கு இந்த சலுகை இருக்கவில்லை

Qualcomm நிறுவனம் கைமாறினால், அதன் உயரிய பதவியில் இருப்பவர்களுக்கும் `சிவியரன்ஸ் கேஷ்' என்று கூறப்படும் தக்க இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் Qualcomm நிறுவனம் கைமாறினால், துணை தலைவர் மற்றும் அதற்கும் மேலே இருப்பவர்களுக்கு அவர்கள் சம்பளத்தின் 1.5 மடங்கும், வருடாந்திர போனஸும் இழப்பீட்டுத் தொகையாக கொடுக்கப்படும். மேலும், அவர்கள் மருத்தவக் காப்பீட்டுக்குத் தேவையான ஒரு தொகையும் குறிப்பிட்ட காலம் வரை வழங்கப்படும்.  

இதுவரை Qualcomm நிறுவனத்தில் துணைத் தலைவருக்குக் கீழே இருந்தவர்களுக்குத் தான் இதைப் போன்ற சலுகைகள் இருந்தன. ஆனால், முதன் முறையாக உயரிய பதவியில் இருப்பவர்களுக்கும் இந்த சலுகைகளை நீட்டிப்பு செய்துள்ளது Qualcomm. 

கடந்த டிசம்பர் மாதம் தான், நிறுவனத்தின் துணை தலைவருக்குக் கீழே இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் இப்படிப்பட்ட சலுகையைத் தருவது குறித்து முடிவெடுக்கப்பட்டு வழிமுறைகள் வகுக்கப்பட்டன. ஆனால், Qualcomm நிறுவனத்தை வாங்க இருந்த Broadcom நிறுவனம் இதை எதிர்த்தது. இந்த புதிய வழிமுறைகள் மூலம், Qualcomm நிறுவனத்தை வாங்குவது கடினமாகிவிடும் என்று Broadcom எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனால், Broadcom நிறுவனத்தின் எண்ணத்துக்கு கடந்த மார்ச் மாதம் பேரிடி விழுந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், Broadcom நிறுவனம் Qualcomm-ஐ வாங்குவதற்கு தடை போட்டார். ஆனாலும், Qualcomm இதைத் தாண்டியும் பல பிரச்னைகள் இருப்பதாக சந்தை நோக்கர்கள் கருதுகின்றனர். 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mobiles, Tablets, Telecom, PC Laptops, Qualcomm
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy ஸ்மார்ட்போன் விலைகள் இந்தியாவில் உயர்வு – பல மாடல்கள் பாதிப்பு
  2. Motorola Edge 70 Fusion இந்தியாவில் அறிமுகம்.. அரசவைக்கு சிறப்பு அம்சங்கள்
  3. MacBook Neo அதிகாரப்பூர்வமாக அறிமுகம்: பட்ஜெட் விலை, நான்கு நிறங்கள் மற்றும் பல அம்சங்கள
  4. Google Pixel 10 சலுகை: ₹13,800-க்கும் அதிக தள்ளுபடி – எப்படி பெறுவது?
  5. Xiaomi 17T இந்தியாவில் வெளியாகும் நாள் இதுவா? Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகமாக தயாராகிறது
  6. விவோ X300 FE Snapdragon 8 Gen 5, 50MP Telephoto Camera உடன் அறிமுகம்
  7. மார்ச் 5ல் அறிமுகமாகும் முன் Nothing Phone 4a சீரிஸ் விலை வெளியானது
  8. டெக்னோ பாப் எக்ஸ் இந்தியாவில் அறிமுகமாகும் தேதி; 'டெக்னோ ஸ்பார்க் கோ 3'-ன் மறு பதிப்பா இது?
  9. 13-இஞ்ச் Liquid Retina திரை, Apple A18 Pro சிப் MacBook Neo இந்தியாவில்
  10. டிசைனிங் கத்துக்கணுமா? அடோப் டூல்ஸ் இப்போ ஃப்ரீ! இந்திய மாணவர்களுக்கு 'அடோப்' தந்த செம்ம கிப்ட்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.