போக்கோ எம்8 5ஜி (Poco M8 5G) இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 3D கார்வ்டு டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் மற்றும் 5520mAh பேட்டரி
Photo Credit: Poco
Poco M8 5G ஆனது அணில் வடிவ இரட்டை பின்புற கேமரா தொகுதியைக் கொண்டுள்ளது.
2026-ன் தொடக்கத்திலேயே பட்ஜெட் மற்றும் மிட்-ரேஞ்ச் போன் மார்க்கெட்டை அதிரவைக்க போக்கோ (Poco) தனது புதிய அஸ்திரத்தை ஏவியுள்ளது. இன்று (ஜனவரி 8, 2026) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக Poco M8 5G அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வந்த M7 5G-யை விட பல மடங்கு மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் களமிறங்கியுள்ளது. விலை மற்றும் அதிரடி சலுகைகள்: முதல்ல விலைக்கே வருவோம் பாஸ்! இந்த போன்
● 6GB + 128GB: ரூ. 21,999
● 8GB + 128GB: ரூ. 22,999
● 8GB + 256GB: ரூ. 24,999
ஆனா, இப்போதான் ட்விஸ்ட்! அறிமுகச் சலுகையாக முதல் 12 மணிநேர விற்பனையில் வங்கித் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் எல்லாம் சேர்த்து, இந்த போனை நீங்கள் வெறும் ரூ. 15,999 என்ற ஆரம்ப விலையில் வாங்க முடியும். இது ஜனவரி 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
இந்த பட்ஜெட்ல ஒரு 3D கார்வ்டு AMOLED டிஸ்ப்ளே கிடைக்கிறது பெரிய விஷயம். 6.77-இன்ச் அளவு கொண்ட இந்த ஸ்க்ரீன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டது. இதனால வெயில்ல நின்னு போன் யூஸ் பண்ணாலும் ஸ்க்ரீன் செம தெளிவா தெரியும். கூடவே 'Wet Touch 2.0' வசதி இருக்கறதால, கையில் ஈரம் இருந்தாலும் டச் கரெக்டா வேலை செய்யும். இதுல Qualcomm Snapdragon 6 Gen 3 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 4nm தொழில்நுட்பத்தில் உருவானது. அன்டுடு (AnTuTu) ஸ்கோர் 8,25,000-க்கும் மேல இருக்கறதால, கேமிங் மற்றும் மல்டி-டாஸ்கிங் ரொம்ப ஸ்மூத்தா இருக்கும். சாப்ட்வேர் பக்கமும் போக்கோ அசத்தியிருக்காங்க. இதுல Android 15 அடிப்படையிலான HyperOS 2.0 இருக்கு. முக்கியமா, 4 வருஷம் OS அப்டேட் மற்றும் 6 வருஷம் செக்யூரிட்டி அப்டேட் தர்றதா உறுதி குடுத்திருக்காங்க.
பின்னாடி 50MP மெயின் கேமரா (Light Fusion 400 சென்சார்) மற்றும் 2MP டெப்த் சென்சார் இருக்கு. முன்பக்கம் 20MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் வசதியும் இதுல உண்டு. பேட்டரியை பொறுத்தவரை 5,520mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி இருக்கு. இதை சார்ஜ் செய்ய பெட்டிக்குள்ளேயே 45W ஃபாஸ்ட் சார்ஜர் தர்றாங்க. இதோட 18W ரிவர்ஸ் சார்ஜிங் வசதி மூலமா மத்த போன்களையும் நீங்க சார்ஜ் பண்ணிக்கலாம்.
வெறும் 7.35mm தடிமன் மற்றும் 178 கிராம் எடை கொண்ட இந்த போன் ரொம்ப ஸ்லிம்மா இருக்கும். IP66 ரேட்டிங் மற்றும் மிலிட்டரி-கிரேடு (MIL-STD-810H) உறுதித்தன்மை இருக்கறதால, போன் கீழே விழுந்தாலோ அல்லது தண்ணி பட்டாலோ அவ்வளவு சீக்கிரம் ஒன்னும் ஆகாது.
சுருக்கமா சொல்லணும்னா, 16 முதல் 20 ஆயிரம் பட்ஜெட்ல ஒரு பிரீமியம் லுக் மற்றும் பவர்ஃபுல் போன் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு Poco M8 5G ஒரு "பெஸ்ட் டீல்" தான். உங்களுக்கு இந்த போனோட கார்வ்டு டிஸ்ப்ளே பிடிச்சிருக்கா இல்ல 5520mAh பேட்டரி பிடிச்சிருக்கா? கமெண்ட்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Razer Hammerhead V3 Chroma Wired Earphones Launched With ANC, IPX4 Rating: Price, Features
Name of Motorola's Upcoming Wide Foldable Phone Revealed in New Leak