Panasonic Eluga Ray 810 இந்தியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. Eluga சீரீஸின் Panasonic-க்கின் சமீபத்திய போனாகும். இந்த போன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. octa-core MediaTek Helio P22 SoC-யில் இருந்து சக்தியை ஈர்க்கிறது.
இந்தியாவில் Panasonic Eluga Ray 810-ன் விலை:
விலை நிர்ணயம் குறித்து பேசுகையில், Panasonic Eluga Ray 810 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு இந்தியாவில் 16,990 ரூபாயாக விலையிடப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி Starry Black மற்றும் Turquoise Blue வண்ண விருப்பங்களில் வருகிறது. இப்போது இந்தியாவில் பிளிப்கார்ட் வழியாக பிரத்தியேகமாக பிடிபட்டுள்ளது.
Panasonic Eluga Ray 810-ன் விவரக்குறிப்புகள்:
இரட்டை சிம் (நானோ) Panasonic Eluga Ray 810, Android Pie-யால் இயங்குகிறது. Panda protection layer உடன் 6.19-inch HD+ (720 x 1500 pixels) IPS டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இந்த போன் octa-core MediaTek Helio P22 SoC-யால் இயக்கப்படுகிறது. Infinix S5 Lite டை இயக்கும் அதே பிராசசர் இயக்கக்கூடிய இந்த போனின் விலை ரூ. 7,999-யாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Panasonic Eluga Ray 810-ன் மையத்தில் உள்ள MediaTek processor, 2.0GHz கடிகாரம் செய்யப்பட்டு, 4GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களைக் பொறுத்த வரையில், Panasonic Eluga Ray 810-ல் 2-megapixel depth கேமரா உதவியுடன் 16-megapixel primary snapper இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில், செல்ஃபிகளுக்கு 16-megapixel கேமரா உள்ளது. LED flash உடன் பயனர்கள் குறைந்த ஒளி நிலையில் பிரகாசமான செல்ஃபிக்களைப் பிடிக்க அனுமதிக்கிறது. Panasonic Eluga Ray 810-ல் 64GB ஆன்போர்டு ஸ்டோரெஜ் உள்ளது. மேலும், microSD card வழியாக (128GB வரை) விரிவாக்கக்கூடியது.
Panasonic Eluga Ray 810 இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, 4G LTE, GPS மற்றும் Bluetooth 5.0 ஆகியவை அடங்கும். போனின் அங்கீகாரத்திற்காக rear-mounted fingerprint சென்சார் உள்ளது. Panasonic Eluga Ray 810-ல் உள்ள சென்சார்களில் accelerometer, proximity சென்சார் மற்றும் ambient light சென்சார் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்