தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் விவோ நிறுவனம்

Vivo X200 சீரியஸ் செல்போன்கள் அக்டோபர் 14ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது

தரமான சம்பவம் செய்ய காத்திருக்கும் விவோ நிறுவனம்

Photo Credit: Vivo

Vivo X200 series has been introduced in four colourways in China

ஹைலைட்ஸ்
  • Vivo X200 சீரியஸ்சில் மூன்று செல்போன்கள் அறிமுகம்
  • இது MediaTek Dimensity 9400 SoC மூலம் இயக்கப்படுகிறது
  • Android 15 அடிப்படையிலான Origin OS 5 மூலம் இயங்கும்
விளம்பரம்

Vivo X200 சீரியஸ் செல்போன்கள் அக்டோபர் 14ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. Vivo X200 வரிசையில் Vivo X200, X200 Pro, X200 Pro Mini என மூன்று செல்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. X100 சீரிஸ் மூலம் விவோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்திய அம்சங்களின் அடிப்படையில் Vivo X200, X200 Pro ஆகிய இரண்டு செல்போன் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் X200 Pro Mini முற்றிலும் புதிய மாடலாகும். இது மற்ற செல்போன்களை போல ஒரே ஹார்ட்வேர் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. Vivo X200 சீரியஸ் செல்போன்கள் MediaTek Dimensity 9400 சிப்செட், Origin OS 5 மூலம் இயக்கப்படும் என தெரிகிறது. மேலும் Vivo நிறுவனத்தின் சொந்த கண்டுபிடிப்பான Circle to Search உட்பட செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இந்த செல்போன்கள் இயக்கப்படுகிறது.

Vivo X200 சீரியஸ் செல்போன்களின் விலை

சீனாவில் Vivo X200 செல்போன் 12GB ரேம் 256GB மெமரி மாடல் ரூ. 51,000 என்கிற விலையில் தொடங்குகிறது. மேலும் 12GB ரேம் 512GB ஏமாறி மாடல், 16GB ரேம் 512GB மெமரி மற்றும் 16GB ரேம் 1TB மெமரி மாடல்களிலும் கிடைக்கிறது.
Vivo X200 Pro 12GB ரேம் 256GB மெமரி மாடலின் விலை தோராயமாக ரூ. 63,000 என்கிற விலையில் தொடங்குகிறது. Vivo X200 Pro Mini 12GB ரேம் 256GB மெமரி தோராயமாக ரூ. 56,000 என்கிற விலையில் ஆரம்பம் ஆகிறது.


மூன்று ஸ்மார்ட்போன்களும் கார்பன் பிளாக், டைட்டானியம் கிரே, மூன்லைட் ஒயிட் மற்றும் சபையர் ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கின்றன. மூன்று செல்போன்களையும் இப்போதே முன்கூட்டிய ஆர்டர் செய்ய முடியும். X200 மற்றும் X200 Pro Mini அக்டோபர் 19 அன்று கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். அதே நேரத்தில் X200 Pro செல்போனை அக்டோபர் 25 முதல் வாங்கலாம்.

Vivo X200 சீரியஸ் அம்சங்கள்

Vivo X200 Zeiss கலர் சப்போர்ட் கொண்ட 6.67-இன்ச் 10-பிட் OLED LTPS குவாட்-வளைந்த திரையுடன் வருகிறது. இது ஃப்ளிக்கர் குறைப்பு, HDR 10+ மற்றும் 4,500 nits உச்ச பிரகாசம் கொண்டுள்ளது.கேமரா பொறுத்தவரையில் 50 மெகாபிக்சல் சோனி IMX921 முதன்மை கேமரா, 50 மெகாபிக்சல் சோனி IMX882 டெலிஃபோட்டோ சென்சார் கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 90W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் உடன் 5,800mAh ப்ளூவோல்ட் பேட்டரியுடன் வருகிறது.


Vivo X200 Pro mini மாடல் மட்டும் 6.31-இன்ச் பிளாட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மூன்று மாடல்களுக் 4K HDR சினிமாடிக் போர்ட்ரெய்ட் வீடியோ மற்றும் 10-பிட் பதிவில் வினாடிக்கு 60 பிரேம்கள் வரை படம் எடுக்கும் அம்சங்களை செயல்படுத்துகிறது. Vivo X200 Pro மற்றும் X200 Pro Mini ஆகியவை முறையே 6,000mAh மற்றும் 5,800mAh பேட்டரிகளை கொண்டுள்ளது. இரண்டும் 90W வயர்டு சார்ஜிங்சப்போர்ட் செய்கிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Gadgets 360 Staff
 ...மேலும்
        
    
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Galaxy S26: Camera Upgrades மற்றும் Snapdragon 8 Elite Gen 5 உடன் முழு விவரங்கள் லீக்
  2. வெறும் ₹1,299-க்கா ANC நெக்பேண்டா? Lava-வோட இந்த புதிய ஆடியோ ப்ராடக்ட் எப்படி இருக்குன்னு பாருங்க!
  3. மொபைல் கெய்மிங்க்கு இதான் Next Level! OnePlus 15 பத்தி தெரிஞ்சுக்கணுமா? மிஸ் பண்ணாதீங்க
  4. இந்திய கம்பெனில இருந்து மிரட்டலான போன்! Lava Agni 4 டீஸர் பத்தி முழு விவரம்!
  5. ரியல்மி-யின் புதிய ராக்கெட்! Realme GT 8 Pro நவம்பர்-ல் Flipkart-ல் தரையிறங்குகிறது!
  6. 7,500mAh சார்ஜரே இல்லாத பேட்டரியா? புதிய iQOO Neo 11 மாடல் சும்மா தெறிக்குது!
  7. 200MP Zeiss கேமராவுடன் Vivo X300 Pro அறிமுகம்! கேமரா பிரியர்களுக்கு ஒரு பொக்கிஷம்
  8. iQOO-வின் அடுத்த ராக்கெட்! iQOO 15, 10,000+ Multi-Core ஸ்கோருடன் Geekbench-ல் மிரட்டல்
  9. ஒன்ப்ளஸ், iQOO-வுக்கு போட்டியாக Realme! GT 8 Pro நவம்பர் 20-ல் இந்தியாவில் அறிமுகம்?
  10. Snapdragon 8 Elite Gen 5 சில்லுடனான முதல் போன்! OnePlus 15 Flagship-ன் ஸ்பெஷல் அம்சங்கள் இதோ
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »