ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 15 சீரிஸில் புதிய வரவாக 'Reno15 Pro Mini' மாடலை அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது
Photo Credit: Oppo
OPPO Reno15 Pro Mini கசிந்த அம்சங்கள்: 6.32-இன்ச் டிஸ்ப்ளே, 200MP கேமரா விவரங்கள் வெளியானது
இன்னைக்கு இருக்குற போன்கள் எல்லாம் டிஸ்ப்ளே பெருசு பெருசா வந்துட்டு இருக்கு. ஆனா, "எனக்கு ஒரு கையில யூஸ் பண்ற மாதிரி சின்ன போன் வேணும், ஆனா அதுல கேமராவும் பெர்பார்மன்ஸும் வேற லெவல்ல இருக்கணும்" அப்படின்னு நினைக்கிறவங்களுக்கு ஒப்போ (OPPO) ஒரு செம சர்ப்ரைஸ் வச்சிருக்காங்க. அதுதான் OPPO Reno15 Pro Mini.
ரெனோ சீரிஸ் வரலாற்றிலேயே முதல் முறையா ஒரு 'மினி' அல்லது 'காம்பாக்ட்' மாடலை ஒப்போ கொண்டு வர்றாங்க. இதோட டிஸ்ப்ளே சைஸ் 6.32-இன்ச் தான். ஆனா குவாலிட்டில எந்த குறைச்சலும் இல்ல, ஏன்னா இது ஒரு 1.5K AMOLED பிளாட் ஸ்க்ரீன். 120Hz ரிப்ரெஷ் ரேட் இருக்குறதால யூஸ் பண்ண ரொம்ப ஸ்மூத்தா இருக்கும். குறிப்பா இதோட பெசல்கள் (Bezels) வெறும் 1.6mm தான், இதனால ஸ்க்ரீன் பாக்குறதுக்கு ரொம்ப மெலிசா மாடர்னா இருக்கும்.
டிசைன்ல கூட ஒப்போ ஒரு புது ஜாலத்தை காட்டியிருக்காங்க. 'கிளேசியர் ஒயிட்' (Glacier White) கலர்ல ஒரு பிரத்யேகமான 'ரிப்பன் ஸ்டைல்' டிசைன் இதுல வருது. போனோட தடிமன் வெறும் 7.99mm தான், வெயிட் 187 கிராம். சோ, இது உங்க பாக்கெட்டுக்குள்ள ரொம்ப ஈஸியா அடங்கிடும். பாதுகாப்புக்காக IP68 மற்றும் IP69 ரேட்டிங் இருக்கு, சோ தண்ணி, தூசு எதுக்கும் கவலைப்பட வேணாம்.
கேமரா தான் இதோட மெயின் அட்ராக்ஷன். இதுல 200MP மெயின் கேமரா இருக்கு. கூடவே 50MP அல்ட்ரா-வைட் மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் கொடுத்திருக்காங்க. சின்ன போனா இருந்தாலும் இதுல 3.5x ஆப்டிகல் ஜூம் வசதி இருக்குறது ஆச்சரியமான விஷயம். செல்ஃபிக்காக முன்னாடி ஒரு 50MP கேமரா இருக்கு.
இவ்வளவு சின்ன போன்ல எப்படி பேட்டரி இருக்கும்னு யோசிக்கிறீங்களா? அங்கதான் ஒப்போ ஒரு ட்விஸ்ட் வச்சிருக்காங்க. இதுல 6,800mAh பேட்டரி இருக்குன்னு சில தகவல்கள் சொல்லுது (ஆச்சரியமா இருக்கா!). கூடவே 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கு. ப்ராசஸர்னு பார்த்தா MediaTek Dimensity 8450 சிப்செட் இதுல இருக்கு, சோ வேகம் பத்தி சொல்லவே வேணாம்.
இந்த போன் இந்தியாவுல ஜனவரி 2026-ன் தொடக்கத்துல வரும்னு எதிர்பார்க்கப்படுது. இதோட விலை சுமார் ₹35,000 முதல் ₹40,000-க்குள்ள இருக்கலாம். ஐபோன் மினி மாடல்கள் காணாம போனதுக்கு அப்புறம், ஆண்ட்ராய்டுல ஒரு பவர்ஃபுல் காம்பாக்ட் போன் வேணும்னு நினைக்கிறவங்களுக்கு இது ஒரு சரியான பதிலா இருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்