Snapdragon 710 SoC கொண்ட Oppo Reno A அறிமுகம்!

Oppo Reno A-வின் விலை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு JPY 39,380 (தோராயமாக ரூ. 26,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Snapdragon 710 SoC கொண்ட Oppo Reno A அறிமுகம்!

full-HD+ display அமைப்பை வழங்குகிறது Oppo Reno A

ஹைலைட்ஸ்
  • 6GB ரேம் கொண்டுள்ளது Oppo Reno A
  • இந்த போன் இரண்டு வண்ணங்களில் வருகிறது
  • in-display fingerprint sensor-ஐக் கொண்டுள்ளது
விளம்பரம்

Oppo Reno A ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ தொலைபேசி புகைப்படங்களை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தும் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. நீர் மற்றும் தூசியை ஓரளவிற்கு எதிர்க்கும் IP67 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்பையும் ஒப்போ புதிய மாடலில் வழங்கியுள்ளது. Oppo Reno A waterdrop-style display notch மற்றும் in-display fingerprint sensor-ஐக் கொண்டுள்ளது. தொலைபேசியில் இரண்டு தனித்துவமான வண்ணங்கள் உள்ளன. அவை இரண்டும் gradient finish கொண்டவை. Reno A-வின் டிஸ்ப்ளே பேனலில் Corning Gorilla Glass 5 protection உள்ளது.

Oppo Reno A-வின் விலை:

Oppo Reno A-வின் விலை 6 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு JPY 39,380 (தோராயமாக ரூ. 26,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் வருகிறது. இது அக்டோபர் 18 முதல் நாட்டில் விற்பனைக்கு வரும். இருப்பினும், அமேசான் ஜப்பான் மற்றும் ஹிகாரி டிவி போன்ற இ-காமர்ஸ் தளங்கள் அதன் முன்கூட்டிய ஆர்டர்களை எடுக்கத் தொடங்கியுள்ளன. Oppo Reno A-வின் 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கு JPY 38,800 (சுமார் ரூ. 25,700) என Rakuten மொபைல் பட்டியலிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் புதிய ஒப்போ தொலைபேசியின் விவரங்கள் மற்றும் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Oppo Reno A-வின் விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்:

டூயல் சிம் (நானோ) Oppo Reno A, ColorOS 6 உடன்  Android 9 Pie இயங்குகிறது. 6.5inch full-HD+ (1080x2340 pixels) display உடன் 19.5:9 aspect ratio மற்றும் 91 percent screen-to-body ratio-வைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி octa-core Qualcomm Snapdragon 710 SoC-ல் இயக்கப்படுகிறது. அதோடு 6 ஜிபி ரேம் உள்ளது.

Oppo Reno A 16-megapixel primary sensor மற்றும் 2-megapixel secondary, depth sensor ஆகியவற்றைக் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 25 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.

Oppo Reno A 64 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனைக் கொண்டுள்ளது, இவை இரண்டும் microSD card வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடியவை. தொலைபேசியின் இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC (FeliCa compatible), Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். தொலைபேசியில் உள்ள சென்சார்களில் accelerometer, ambient light, gyro, magnetometer, மற்றும் proximity sensor ஆகியவை அடங்கும். in-display fingerprint உள்ளது.

கடைசியாக, Oppo Reno A 158.4x75.4x7.8 mm அளவிடுவதோடு 3,600mAh பேட்டரியை பேக் செய்யும்.

  • KEY SPECS
  • NEWS
Display 6.40-inch
Processor Qualcomm Snapdragon 710
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 3600mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய செய்திகள்

#சமீபத்திய செய்திகள்
  1. லாவா போல்ட் என்2 5ஜி 6,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  2. புதிய அம்சத்தால் இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களது புரொஃபைல் கிரிட்டை இனி விருப்பம்போல மறுவரிசைப்படுத்தலாம்
  3. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் பல-கணக்கு ஆதரவு (Multi-Account Support) கூடுதல் பயனர்களுக்கு வழங்கப்படுவதாகத் தகவல்
  4. WWDC 2026: iOS 27 வெளியீட்டுத் தேதி, அப்டேட் செய்யும் முறை மற்றும் ஆதரவுள்ள சாதனங்களின் பட்டியல்
  5. WWDC 2026: முக்கிய ஆப்பிள் இண்டெலிஜென்ஸ் மேம்பாடுகளுடன் கூடிய சிரி AI-ஐ ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது
  6. WWDC 2026: ஜெமினி AI மூலம் இயங்கும் புதிய சிரி அம்சங்களை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம்
  7. அமேசான் மெகா டீல்ஸ்: விவோ X300 FE, ஒன்பிளஸ் நோர்ட் CE 6 மற்றும் முக்கிய கேஜெட்டுகளுக்கு அதிரடி தள்ளுபடி!
  8. ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்: ஒன்பிளஸ் 15, நோர்ட் 6, பேட் 4 மற்றும் பல தயாரிப்புகளுக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு
  9. இந்தியாவில் சியோமி பேட் 8 இன் விலை உயர்ந்தது: இப்போது அதன் விலை எவ்வளவு என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
  10. இந்தியாவில் வாங்குபவர்களின் முடிவுகளில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் முக்கிய பங்கு வகிப்பதாக மெட்டா ஆய்வு கூறுகிறது
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »