ஸ்மார்ட்போன் சூடாவதைக் கட்டுப்படுத்தும் வகையில், கிராபைட் டியூப், கிராபைட் ஷீட், காப்பர் ஃபாயில் ஆகியவற்றிலான மல்டி கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது
ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் 34,990 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒப்போ தரப்பில் ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கடந்த ஜூன் மாதம் சீனாவில் ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரெனோ 3 ப்ரோவைக் காட்டிலும் சிறிது மேம்படுத்தப்பட்ட வேரியன்டாக உள்ளது. குறிப்பாக 65W சூப்பர் சார்ஜ் டெக்னாலஜி கொண்டு வரப்பட்டுள்ளது.
விலை மற்றும் சிறப்பம்சங்கள்:
8ஜிபி ரேம், 128 ஜிபி கொண்ட ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டாரி நைட், சில்கி வயிட் என மொத்தம் இரண்டு விதமான கலர் வேரியன்டுகள் உள்ளன.
ஆண்ட்ராய்டு 10, கலர் OS 7.2 இயங்குதளத்தில் ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இயங்குகிறது. 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே, 3டி பார்டர்லெஸ் சூப்பர் அமோலேட் திரை, 90Hz ரெவ்ரெஷ் ரேட் உள்ளன. இதில் ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 720G SoC பிராசசர் உள்ளதால் ஸ்மார்ட்போனின் வேகம் அதிகமாக உள்ளது.
மேலும், ஸ்மார்ட்போன் சூடாவதைக் கட்டுப்படுத்தும் வகையில், கிராஃபைட் டியூப், கிராஃபைட் ஷீட், காப்பர் ஃபாயில் ஆகியவற்றிலான மல்டி கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.
![]()
Oppo Reno 4 Pro ஸ்மார்ட்போனில் குவாட் கேமரா உள்ளது
கேமராவைப் பொறுத்தவரையில் பின்புறத்தில் சோனி IMX586 சென்சாருடன் 48MP பிரைமரி கேமராவும், 8MP அல்டரா வைடு செகண்டரி கேமராவும், 2MP மேக்ரோ, 2MP மோனோ சூட்டர் கேமரா என நான்கு கேமராக்கள் உள்ளன. இதே போல் முன்புறத்தில் 32 மெகா பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது.
மேலும், எக்ஸ்பேண்டபிள் மெமரி ஸ்லாட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், நேவிக், USB டைப் சி போர்ட், 3.5mm ஹெட்போன், இன் டிஸ்பிளே விரல் ரேகை சென்சார் ஆகியவை உள்ளன. 4,000 mAh சக்தி கொண்ட பேட்டரியும், அதற்காக 65W சார்ஜரும் வழங்கப்படுகின்றன.
ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. வாடிக்கையாளர்கள் அமேசான், ஃபிளிப்கார்ட், பேடிஎம் மால், ரிலையன்ஸ் டிஜிட்டல், குரோமா, டாட்டா கிளிக் உள்ளிட்ட ஆன்லைனிலும், வெளிக்கடைகளிலும் வாங்கலாம்.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹63,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Oppo Find X10 Pro Max Price in India Revealed via Early Listing as Tipster Hints at Launch Date: Specifications, Features
OnePlus Ace 7 Series Spotted on Geekbench With Snapdragon 8 Elite Gen 5, Android 17
Apple HomeView Smart Hub, New Apple TV 4K and HomePod mini Launch Timeline Leaks