Photo Credit: Twitter/ @Mrwhosetheboss
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் Reno 3 Pro 5G மற்றும் Reno 3 5G ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு போன்களும் விரைவில் விற்பனைக்கு வந்தன. இப்போது, Oppo Reno 3 Pro சீனாவுடன் வரையறுக்கப்படாது என்று தெரிகிறது. ஏனெனில் ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தைக்கு வரும். இந்த Oppo Reno 3 Pro வேரியண்ட்டில் இரட்டை செல்பி கேமராக்கள், வெவ்வேறு இன்டர்னல்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்திய மாடலுக்கும் 5G நெட்வொர்க்குகள் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. அனைத்து விவரங்களுக்கும் இங்கே படிக்கவும்.
Oppo Reno 3 Pro-வின் வருகையைப் பற்றிய செய்தி முதலில் 91Mobiles-ஆல் தெரிவிக்கப்பட்டது. இது நிறுவனத்தின் உள் நபர்களை ஆதாரமாகக் காட்டியது. இந்த அறிக்கை Reno 3 Pro-வில் இரட்டை செல்ஃபி கேமராக்கள் இடம்பெறும் என்றும் உலகின் முதல் 44 மெகாபிக்சல் செல்பி ஷூட்டரை கொண்டிருக்கும் என்றும் கூறுகிறது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Reno 3 Pro-வில் ஒரு செல்ஃபி ஷூட்டர் மட்டுமே இருந்தது. இந்திய மாடலுக்கும் 5G ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், ஸ்மார்ட்போனை இயக்கும் சிப்செட் வித்தியாசமாக இருக்குமா என்பது தெரியவில்லை.
ஆச்சரியம் என்னவென்றால், இரட்டை கேமரா செல்ஃபி அமைப்பைக் கொண்ட ஒரு சாதனம் Mrwhosetheboss-ஆல் ட்வீட் செய்யப்பட்டது. யூடியூபரும், கேள்விக்குரிய சாதனம் 44 மெகாபிக்சல் செல்பி ஷூட்டருடன் 2 மெகாபிக்சல் depth சென்சாருடன் இருப்பதாகவும், ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். இது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Reno 3 Pro-வை விட வித்தியாசமானது. இது இடதுபுறத்தில் ஒரு செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது. Reno 3 Pro பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo Reno 3 Pro, 5G-இயக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC-யால் இயக்கப்பட்டது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. Reno 3 Pro ஆண்ட்ராய்டு 10-க்கு மேல் ColorOS 7.0-ல் இயக்குகிறது. இது பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,025mAh பேட்டரியை பேக் செய்கிறது. இருப்பினும், ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும் நேரத்தில், குறிப்பாக நாட்டில் தற்போது 5G இணைப்பு இல்லாததால், இந்த விவரக்குறிப்புகள் மாறக்கூடும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்