ஓப்போ நிறுவனம், Oppo Reno 2 தொடர் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. Oppo Reno 2, Reno 2Z, Reno 2 என இந்த தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிடத்தக்கதாக, இந்த தொடரில் உள்ள 3 ஸ்மார்ட்போன்களுமே, நான்கு பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது, ஆண்ட்ராய்ட் 9 பையை மையப்படுத்திய ColorOS 6.1 அமைப்பை கொண்டு இயங்குகிறது. அனைத்திற்கும் மேலாக, 3 ஸ்மார்ட்போன்களும் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது. முன்பு இருந்தது போலவே Oppo Reno 2 ஸ்மார்ட்போனில் சார்க் ஃபின் ரைசிங் செல்பி கேமரா தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. Oppo Reno 2Z, Reno 2F என மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களில் சாதாரன பாப்-அப் செல்பி கேமரா தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
Oppo Reno 2 ஸ்மார்ட்போன் 36,990 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. மேலும் செப்டம்பர் 20-ல் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ல் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் நீலம் (Ocean Blue) மற்றும் கருப்பு (Luminous Black) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
Oppo Reno 2Z ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு தற்போதே துவங்கிவிட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6-ல் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 29,990 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்படுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கருப்பு (Luminous Black), வெள்ளை (Sky White), மற்றும் போலார் லைட் (Polar Light) என மூன்று வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
மறுபுறத்தில் Oppo Reno 2F ஸ்மார்ட்போன் நவம்பர் மாதத்தில் சந்தையை எட்டவுள்ளது, இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் விலை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை (Sky White) மற்றும் பச்சை (Lake Green) என இரண்டு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது.
அறிமுக சலுகைகளாக Oppo Reno 2 மற்றும் Oppo Reno 2Z ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களையும், HDFC கார்டுகளை பயன்படுத்தி EMI பரிவர்த்தனை மூலம் பெற்றால் 5 சதவிகித உடனடி தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் எக்ஸ்சேன்ச் சலுகையாக கூடுதல் 3,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி HDFC கார்டுகளுக்கு 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் Oppo Reno 2 ஸ்மார்ட்போன் 20:9 திரை விகிதத்துடனான 6.55-இன்ச் AMOLED பனோரமிக் நாட்ச் இல்லாத முழு நீல திரையை கொண்டிருக்கும் எனபதை அறிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 93.1 சதவித திரை-உடல் சதவிகிதம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. 8GB RAM உடன் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னேப்டிராகன் 730G SoC ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 வசதியுடன் 4,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஓப்போ ஸ்மார்ட்போன். மேலும், டைப்-C சார்ஜிங் போர்ட் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அல்ட்ரா டார்க் மோட், போக்கே மோட் போன்ற பல வசதிகளை மேம்படுத்த இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக நியூரல் ப்ராசஸிங் யூனிட் (Neural Processing Unit (NPU)) என்ற ஒரு சிறப்பு வசதியை கொண்டிருக்கும். இதற்கு முந்தைய ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடுகையில் இந்த ஸ்மார்ட்போன் 25 சதவீதம் வேகமாக கிராஃபிக் ரெண்டரிங் திறனை கொண்டுள்ளது. கேமிங்கிற்கென Game Boost 3.0, கேம் அசிஸ்டன்ட் மற்றும் HDR10 கேமிங் வசதி ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. Oppo Reno 2 ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வளைந்த 3D பின்புற கிளாஸ் பேனலை கொண்டிருக்கும். அனைத்திற்கும் மேலாக இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் கேமராவை கொண்டிருக்கும். இந்த அனைத்து அம்சங்களையும் ஓப்போ நிறுவனம் உறுதி செய்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளன, அவற்றில் முக்கியமானவை கேமராக்கள். நான்கு பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2-மெகாபிக்சல் என மேலும் மூன்று கேமரா சென்சார்கள் இடம்பெற்றிருக்கும் என இந்த கசிவு குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2x அப்டிகல் ஜூம், 5x ஹைபிரிட் ஜூம், 20x ஹைபிரிட் ஜூம், OIS மற்றும் EIS வீடியோ நிலைப்பாடு, 60fps ப்ரேம் ரேட்டுடன் மிகவும் நிலையான விடியோவை எடுக்கும் திறன், மற்றும் s 116-டிகிரி வரை விரிந்த வீடியோவை எடுக்கும் திறன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
Oppo Reno 2Z ஸ்மார்ட்போன் 91.6 சதவித திரை-உடல் சதவிகிதம், 19.5:9 திரை விகிதத்துடன் 6.53-இன்ச் FHD+ (1,080 x 2,340 பிக்சல்கள்) திரை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. 8GB RAM உடன் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P90 SoC ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 256GB வரையிலான சேமிப்பு அளவை கொண்டுள்ளது. VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 வசதியுடன் 4,000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஓப்போ ஸ்மார்ட்போன்.
கேமராவை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமராக்களுடன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல், இரண்டு 2 மெகாபிக்சல் என நான்கு கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. 2x அப்டிகல் ஜூம், EIS வீடியோ நிலைப்பாடு, 60fps ப்ரேம் ரேட்டுடன் மிகவும் நிலையான விடியோவை எடுக்கும் திறன், அல்ட்ரா-நைட் மோட் வசதி ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.
Oppo Reno 2Z ஸ்மார்ட்போன் 19.5:9 திரை விகிதத்துடனான 6.53-இன்ச் FHD+ (1,080 x 2,340 பிக்சல்கள்) திரை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பை கொண்டுள்ளது. 8GB RAM உடன் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P70 SoC ப்ராசஸரை கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 128GB வரையிலான சேமிப்பு அளவை கொண்டுள்ளது.
கேமராவை பொருத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் நான்கு பின்புற கேமராக்களுடன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மொனோக்ரோம் கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா என நான்கு கேமரா சென்சார்களை கொண்டுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டுள்ளது. 10x டிஜிட்டல் ஜூம், EIS வீடியோ நிலைப்பாடு, அல்ட்ரா-நைட் மோட் 2.0 வசதி ஆகியவற்றை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்