Photo Credit: Oppo
Oppo Reno 13 சீரிஸ் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு, ரேம் மற்றும் மெமரி பற்றிய தகவல்களை உறுதி செய்துள்ளது. இந்த செல்போன் சீரியஸ் அடிப்படை மாடல் மற்றும் ப்ரோ மாடலை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Oppo Reno 12 மற்றும் Reno 12 Pro ஆகியவற்றை தொடர்ந்து இந்த செல்போன் மாடல் வருகிறது.
Oppo Reno 13 செல்போன் சீரியஸ் சீனாவில் நவம்பர் 25ல் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் வெய்போ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பட்டர்ஃபிளை பர்பிள் நிறத்தில் கிடைக்கும். மற்ற வண்ண விருப்பங்கள் அறிமுகத்திற்கு முந்தைய நாட்களில் உறுதிப்படுத்தப்படும். குறிப்பாக, Oppo Pad 3 மற்றும் Oppo Enco R3 Pro TWS இயர்போன்கள் மற்றும் இதர ஸ்மார்ட்போன்களுடன் வெளியிடப்படும்.
பேஸிக் Oppo Reno 13 மாடல் Oppo China e-store பட்டியலில் ஐந்து வகையான ரேம் மற்றும் மெமரி கட்டமைப்புகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது. 12GB ரேம்+ 256GB மெமரி, 12GB + 512GB, 16GB + 256GB, 16GB + 512GB மற்றும் 16GB + 1TB ஆகிய ஆப்ஷன்களில் கிடைக்கிறது. Oppo Reno 13 செல்போன் தொடர் ஜனவரி 2025ல் உலகளவில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ரெனோ 13 கைபேசிகள் அந்த நேரத்தில் இந்தியாவிற்கு வரக்கூடும் என தெரிகிறது.
Oppo Reno 13 செல்போன் மாடலின் வெண்ணிலா மற்றும் ப்ரோ ஆகிய இரண்டு வகைகளிலும் MediaTek Dimensity 8300 சிப்செட்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Oppo Reno 13 Pro இன்னும் வெளியிடப்படாத MediaTek Dimensity 8350 சிப்செட்டைக் கொண்டிருக்கலாம் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் Oppo Reno 13 Pro இன் சீனப் பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் PKK110 மாடல் எண்ணைக் கொண்ட Oppo செல்போன் பற்றி ஆன்லைனில் தகவல் வெளியாகி உள்ளது. CPU மற்றும் GPU பற்றிய அப்டேட்களில் MediaTek Dimensity 8300 SoC கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போன் 16ஜிபி ரேம் வரை சப்போர்ட் செய்யும். ஆண்ட்ராய்டு 15ல் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
Oppo Reno 10 சீரிஸ் மாடல்கள் 6.7-இன்ச் கர்வ்டு OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளன. மேலும் இவை 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளன. இதில் Pro+ மாடல் 1.5k ரெசல்யூஷனை வழங்குகிறது, மற்ற 2 மாடல்களும் ஃபுல் HD+ ரெசல்யூஷனை கொண்டுள்ளன. 3 மாடல்களும் 12GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. பேட்டரியை கெப்பாசிட்டியை பொறுத்தவரை Reno 10 மாடல் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும், 5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. Pro மாடல் 80W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 4,600 mAh பேட்டரியுடன் வருகிறது. டாப் என்ட் மாடல் மொபைல் 100W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 4,700 mAh பேட்டரியை கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்