இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகியவற்றை கொண்டுள்ளது.
அடுத்த வரத்தில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ள 'ஓப்போ K3'
'ஓப்போ K3' ஸ்மார்ட்போனிற்கென் ஒரு டீசர் பக்கத்தை வெளியிட்ட அமேசான், இந்த ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்ற தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 19 அன்று அறிமுகமாகவுள்ளது. பாப்-அப் செல்பி கேமரா கொண்ட இந்த 'ஓப்போ K3' ஸ்மார்ட்போன் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுக செய்யப்பட்டது.
இந்த ஸ்மார்ட்போன் பாப்-அப் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரின்ட் சென்சார், ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது என்பதை இதன் அறிமுகத்தின் போது வெளியிடப்படும்.
சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் 3 வகைகளில் அறிமுகமானது. 6GB RAM + 64GB சேமிப்பு அளவு, 6GB RAM + 128GB சேமிப்பு அளவு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என்ற அளவுகளை கொண்ட இந்த மூன்று வகைகள் 1,599 யுவான்கள் (16,100 ரூபாய்), 1,899 யுவான்கள் (19,100 ரூபாய்) மற்றும் 2,299 யுவான்கள் (23.,100 ரூபாய்) என்ற விலைகளில் விற்பனையாகின. அமேசான் வெளியிட்டுள்ள புகைப்பட்டத்தின்படி இந்த ஸ்மார்ட்போன் ஊதா (Purple0 மற்றும் கருப்பு (Black) என இரு வண்ணங்களில் வெளீயாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு நானோ சிம் வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பு கொண்டு செயல்படுகிறது. 6.5-இன்ச் அளவிலான FHD+ திரை (1080x2340 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் என்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன், இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர் ப்ரின்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னேப்ட்ராகன் 710 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் அளவிலான பாப்-அப் செல்பி கேமராவை கொண்டுள்ளது. பின்புறத்தில் 16 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் கேமரா என இரண்டு கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3,765mAh அளவிலான பேட்டரியையும் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple's Upgraded AirTag to Offer Improved Tracking Features; HomePod Mini to Feature New Chip: Report