இந்தியாவில் Oppo K1-ன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்போ போன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது Flipkart மற்றும் நாட்டின் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த போன் Astral Blue மற்றும் Piano Black ஆகிய இரண்டு தனித்துவமான கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
இந்தியாவில் Oppo K1-ன் விலை ரூ. 13,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரே 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 16,990-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது ரூ. 3,000 விலைக் குறைப்பைக் காண்கிறது. இந்த ஸ்மார்ட்போன் திருத்தப்பட்ட விலைக் குறியுடன் Flipkart மூலம் கிடைக்கிறது. மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் இந்த விலை பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.
இந்த விலை வீழ்ச்சி குறித்த கூடுதல் தெளிவுக்காக நாங்கள் Oppo-வை அணுகியுள்ளோம், எங்களுக்கு மீண்டும் அறிவிப்பு வந்தவுடன் இந்த இடத்தை புதுப்பிப்போம்.
டூயல்-சிம் (நானோ) Oppo K1, ColorOS 6 உடன் Android Pie-ல் இயங்குகிறது. இது 19.5:9 aspect ratio உடன் 6.4-inch full-HD+ (1080x2340 pixels) AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. அங்கிகாரத்திற்காக in-display fingerprint சென்சாரும் உள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Qualcomm Snapdragon 660 SoC-யால் இயக்கப்படுகிறது. இதில் 64GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவக்கம் செய்யலாம்.
Oppo K1-ன் டூயல் ரியர் கேமரா அமைப்பில், 16-megapixel முதன்மை சென்சார் மற்றும் 2-megapixel இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு, இந்த ஸ்மார்ட்போனில் 25-megapixel செல்ஃபி கேமராவும் உள்ளது
Oppo K1-ன் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, Micro-USB மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, ambient light sensor, magnetometer மற்றும் proximity சென்சார் ஆகியவை அடங்கும். தவிர, இந்த போன் 3,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்