இந்தியாவில் இன்று முதல் ஃபிளிப்கார்டின் வலைதளத்தில் ஓப்போ கே 1 ஸ்மார்ட்போன் வெளியாகுகிறது.
16,990 ரூபாய்க்கு இந்த ஓப்போ கே 1 ஃபிளிப்கார்டில் வெளியாகியுள்ளது.
திரையிலேயே கைவிரல் ரேகையைப் பதிவு செய்யும் வசதிகொண்ட ஓப்போ கே 1 ஸ்மார்ட்போன், இந்தியாவில் பட்ஜட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓப்போ கே1, இன்று 12 மணி முதல் பிளிப்கார்டின் வலைதளத்தில் விற்பனைக்கு வெளியாகியது. 6.4 இஞ்ச் உயரம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஏஸ்டிரல் ப்ளூ மட்டும் பியானோ பிளாக் ஆகிய நிறங்களில் வெளியாகியுள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை ரூபாய் 16,990-க்கு, இந்த போன் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 499க்கு ஃபிளிப்கார்டில் 3 முதல் 6 மாதங்கள் வரை போனுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டம் மற்றும் வட்டியில்லா தவனை வசதி திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனையை முன்னிட்டு கேஷ்பேக் வசதி மற்றும் சிட்டி பேங்க் சார்பாக கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடியும் தரப்படுகிறது. அதுபோல ஆக்ஸிஸ் வங்கி க்ரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 5 சதவிகித தள்ளுபடியும் தரப்படுகிறது.
ஓப்போபின் இந்த புதிய மாடல் போனின் அமைப்புகளைப் பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி-யில் இயங்குவதாகவும் 4ஜிபி ரேம் மற்றும் 64 சேமிப்பு வசதி கொண்டுள்ளதாகவும் இருக்கும்.
இரண்டு பின்புற கேமராக்களுடன் வெளியாகியுள்ள இந்த ஓப்போ கே1, அண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் 3,600 mAh பேட்டரி பவரையும் கொண்டுள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S27 Ultra Tipped to Launch With a Custom Snapdragon 8 Elite Series Chip