மார்ச் 6-ல் வெளியாகிறது Oppo Find X2! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 25 பிப்ரவரி 2020 16:01 IST
ஹைலைட்ஸ்
  • Find X2 போனின் வெளியீட்டு தேதியாக மார்ச் 6-ஐ ஒப்போ உறுதிப்படுத்தியுள
  • இந்த போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசசரால் இயக்கப்படுகிறது
  • Oppo Find X2 உடன் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்சை வெளியிடக்கூடும்

Oppo Find X2, 6.5 இன்ச் AMOLED திரை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

சீன மொபைல் உற்பத்தியாளரான ஓப்போ, அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் Oppo Find X2-வின் அறிமுக தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. இது மார்ச் 6-ஆம் தேதி சீனாவில் நடைபெறும் ஒரு நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று ஓப்போ ஒரு ஆன்லைன் பதிவில் உறுதிப்படுத்தியது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 22 அன்று MWC பார்சிலோனா நிகழ்வில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் குறித்த அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்த வெளியீடு மாலை 5 மணிக்கு, பெய்ஜிங் நேரம் (2.30 PM IST) நடைபெறும் என்று வெய்போவின் ஆன்லைன் பதிவு மேலும் கூறியுள்ளது.

இந்த நேரத்தில், Oppo Find X2-வின் விவரக்குறிப்புகள் தெளிவாக இல்லை. Oppo Find X2, ஸ்னாப்டிராகன் 865 பிராசசர் மூலம் இயக்கப்படும் என்பதை OPPO-வின் துணைத் தலைவரும் உலகளாவிய விற்பனைத் தலைவருமான ஆலன் வு (Alen Wu) முன்பு உறுதிப்படுத்தியிருந்தார். கடந்த வாரம், ஸ்மார்ட்போன் வியட்நாமிய சில்லறை விற்பனையாளர் வலைத்தளமான ஷோபியிலும் (Shopee) காட்டப்பட்டது. இது அதன் கூறப்பட்ட விவரக்குறிப்புகளை பட்டியலிட்டது. இணையதளத்தில் உள்ளபடி, போனில் 6.5 அங்குல AMOLED திரை, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ், பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பு மற்றும் 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Find X2-வில் 4,065 எம்ஏஎச் பேட்டரி, USB டைப்-சி போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் இல்லை. Oppo Find X2, ஆண்ட்ராய்டு 10 உடன் வெளியேறும் என்றும் அந்த பட்டியல் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை VND 40,000,000 [இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,23,700]-யாக ஷாப்பி (Shopee) பட்டியலிட்ள்ளது. தற்போது, ​​Oppo Find X2-வின் முன்னோடி Find X இந்தியாவில் ஜூன் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் விலை ரூ.59,990 ஆகும். Find X அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், ஸ்மார்ட்போன் ஒரு மோட்டார் கேமரா பாப்-அப் வடிவமைப்பைக் கொண்ட முதல் போன்களில் ஒன்றாகும் என்பதால் இந்தத் துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக, Find X2 உடன் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்சை வெளியிடக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவித்தன. ஒப்போ விபி பிரையன் ஷென் (Brian Shen) ட்விட்டரில் பகிர்ந்த டீஸர் படம் ஆப்பிள் வாட்ச் போன்ற வடிவமைப்பைக் காட்டியது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Stunning design
  • Good camera performance
  • Vivid display
  • Snappy performance
  • Bad
  • No IP rating
  • Hidden camera slows down face recognition
 
KEY SPECS
Display 6.42-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 25-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 3730mAh
OS Android 8.1
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo Find X2, Oppo Find X, Oppo, Oppo Find X2 Price, Oppo Find X2 Specifications
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Hubble Space Telescope மற்றும் Euclid Space Telescope இணைந்து எடுத்த Cat’s Eye Nebula-வின் புதிய அதிசயப் படம்
  2. Apple மடிக்கக்கூடிய iPhone ‘iPhone Ultra’ என அறிமுகமாகலாம்: விலை, மெமரி விவரங்கள் கசிந்தது
  3. Nothing Phone 4a, Nothing Phone 4a Pro இந்தியாவில் விற்பனைக்கு: விலை, சலுகைகள், அம்சங்கள்
  4. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  5. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  6. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  7. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  8. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  9. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  10. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.