நான்கு ரியர் கேமராக்களுடன் வெளியானது ஓப்போ ஏஸ் 2! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 ஏப்ரல் 2020 11:40 IST
ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஏஸ் 2 ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது
  • போனில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது
  • ஓப்போ ஏஸ் 2, 12 ஜிபி ரேம் வரை, 256 ஜிபி ஸ்டோரேஜ் வரை பேக் செய்கிறது

ஓப்போ ஏஸ் 2 ஏப்ரல் 20 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்

ஓப்போ ஏஸ் போனின் அடுத்த வெளியீடாக புதிய ஏஸ் 2 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம். இந்த போன், குவாட் ரியர் கேமராக்களுடன் வருகிறது. 6.5 அங்குல முழு எச்டி + டிஸ்பிளே கொண்ட ஓப்போ ஏஸ் 2, ஏப்ரல் 20 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும்.


ஓப்போ ஏஸ் 2 விலை:

போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு மாடலின் விலை சிஎன்ஒய் 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43,200), 
அதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 4,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.47,500) மற்றும் 
டாப்-எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை சிஎன்ஒய் 4,599 (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 49,700) ஆகும். 
இந்த போன் அரோரா சில்வர், மூன் ராக் கிரே மற்றும் பேண்டஸி ஊதா கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டுள்ளது. 


ஓப்போ ஏஸ் 2 விவரங்கள்:

Oppo Ace 2​, டூயல்-சிம் ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது, கலர்ஓஎஸ் 7.1 உடன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்குகிறது. இந்த போன் 6.5 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) முழு எச்டி + அமோலேட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 865 SoC-யால் இயக்கப்படுகிறது. இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

போனின் குவாட் கேமரா அமைப்பில், 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 

ஓப்போ ஏஸ் 20-வில் 65W சூப்பர் வூக் 2.0 ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 40W ஏர் வூக் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. போர்டில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த போன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் வருகிறது. 

 
KEY SPECS
Display 6.50-inch
Processor Qualcomm Snapdragon 865
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
 
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Oppo Ace 2, Oppo Ace 2 Launch, Oppo Ace 2 Price, Oppo Ace 2 Specifications, Oppo
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் வாட்ஸ்அப் மூலம் ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகம்
  2. எதிர்கால கேலக்ஸி போன்களில் வரவிருக்கும் சாம்சங்கின் புதிய 2D/3D டிஸ்ப்ளே தொழில்நுட்ப விவரங்கள்
  3. நீக்கப்பட்ட சாட்களின் அறிவிப்புகளைப் பெறும் பிழையைச் சரிசெய்து iOS 26.4.2 அப்டேட் வெளியிடப்பட்டது
  4. ஆண்ட்ராய்டு ஆப் பதிவுகளை விரைவுபடுத்த கூகுள் 'சரிபார்க்கப்பட்ட மின்னஞ்சல்' அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது
  5. கூகுள் கிளவுட் நெக்ஸ்ட் 2026: புதிய ஜெமினி மற்றும் வொர்க்ஸ்பேஸ் இன்டலிஜென்ஸ் அம்சங்களை கூகுள் அறிமுகம் செய்தது
  6. ஒன்பிளஸ் நார்டு CE 6: 144Hz திரை, 50MP கேமரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இந்தியா அறிமுகத்திற்கு முன் வெளியானது
  7. ரூ. 30,000-க்கு உட்பட்ட சிறந்த கைபேசிகள்: விவோ டி5 ப்ரோ, இன்பினிக்ஸ் நோட் எட்ஜ் மற்றும் பல மாடல்கள் இவை
  8. இந்தியாவில் மோட்டோரோலா Edge 70 Pro, ஒன்பிளஸ் Nord 6 மற்றும் ரெட்மி Note 15 Pro+: விலை & சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  9. இந்தியாவில் போட் Aavante Prime X சவுண்ட்பார் அறிமுகம்: டால்பி அட்மாஸ் & வயர்லெஸ் ஸ்பீக்கர்களுடன் அதிரடி விலை!
  10. சென்ஹைசர் CX 80U, சென்ஹைசர் HD 400U USB டைப்-C இணைப்புடன் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.