விரைவில் வெளியாகும் Oppo A8! விவரங்கள் கசிந்தன....

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 16 டிசம்பர் 2019 13:13 IST
ஹைலைட்ஸ்
  • Oppo A8 TENAA பட்டியல் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவை பரிந்துரைக்கிறது
  • போனின் கசிந்த போஸ்டர் மாறுபட்ட வண்ண விருப்பங்களைக் காட்டுகிறது
  • கசிந்த போஸ்டரில் புதிய Oppo A91 போனும் பட்டியலிடப்பட்டுள்ளது

2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் Oppo A7 ஸ்மார்ட்போனை, Oppo A8 வெல்லும்

Photo Credit: TENAA

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரிடமிருந்து வரவிருக்கும் ஸ்மார்ட்போன் Oppo A8, சீன கட்டுப்பாட்டாளர் TENAA-வின் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. போனை வெளிக்காட்டும் ஒரு போஸ்டர் ஆன்லைனில் வெளிவந்துள்ளது மற்றும் போனின் வடிவமைப்பு மற்றும் பிற விவரங்களை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறது. புதிய Oppo A91 போன், Oppo Reno 3 மற்றும் Oppo Reno 3 Pro 5G ஆகியவற்றுடன் இந்த போனை போஸ்டரில் பட்டியலிடப்பட்டது.

TENAA பட்டியலிலிருந்து தொடங்கி, மாதிரி எண்ணான PDBM00-ஐக் கொண்ட ஓப்போ ஸ்மார்ட்போன் கட்டுப்பாட்டாளரின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த போன் Oppo A8 என்று நம்பப்படுகிறது. இந்த போன் Android Pie-யில் இயங்குவதையும், 6.5inch HD (720x1600 pixels) TFT டிஸ்ப்ளேவை பேக் செய்வதையும் பட்டியல் காட்டுகிறது. இந்த போன், 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, பெயரிடப்படாத 2.3GHz ஆக்டா octa-core processor-ஆல் இயக்கப்படுகிறது. microSD கார்டு ஸ்லாட்டைப் பயன்படுத்தி மேலும் (256 ஜிபி வரை) விரிவாக்க ஆப்ஷனுடன் இண்டர்னல் ஸ்டோரேஜ் 128 ஜிபி என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

பட்டியல் ஏதேனும் அறிகுறியாக இருந்தால், Oppo A8, 12 மெகாபிக்சல் சென்சார், 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டருடன் மூன்று ரியர் கேமரா அமைப்பைக் பேக் செய்ய வேண்டும். முன்னால், போனில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இதில் Micro-USB port, 163.9x75.5x8.3mm அளவீடு மற்றும் 180 கிராம் எடையும் இருக்கும். Oppo A8, 4,230mAh பேட்டரியை பேக் செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது, மேலும் இது கருப்பு, வெள்ளை, பச்சை மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் கிடைக்க வேண்டும்.

TENAA பட்டியலுடன் இணைக்கப்பட்ட படங்கள் Oppo A8-ல் waterdrop-style notch, பின்புறத்தில் மூன்று ரியர் கேமரா அமைப்பு செங்குத்தாக சீரமைக்கப்பட்டு, பின் பேனலின் மேல் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த போனில், rear fingerprint சென்சார், திரையின் வலது விளிம்பில் power பொத்தான் மற்றும் இடதுபுறத்தில் volume பொத்தான்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நினைவுகூர, Oppo A7 கடந்த ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இது இரட்டை கேமரா அமைப்பு மற்றும் Snapdragon 450 SoC உடன் வந்தது.

வெய்போவில் கசிந்த போஸ்டர் அதே விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு அழகியலை மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த போன் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் காணப்படுகிறது, பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பு தெரியும். Oppo A8-ல் 6.5-inch டிஸ்ப்ளே, 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4,230mAh பேட்டரி இருக்கும் என்று கசிவு மீண்டும் வலியுறுத்துகிறது.

Oppo A8, 6.5-inch waterdrop-style notch டிஸ்பிளேவை பேக் செய்ய பட்டியலிடப்படுள்ளது.
Photo Credit: Weibo

 

போஸ்டர் மற்ற போன்களையும் பட்டியலிட்டுள்ளது, அதாவது புதிய Oppo A91 போன். இதில், waterdrop-style notch, பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பு செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது, மற்றும் gradient finishes-ல் சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்கள் காணப்படுகின்றன. 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை பேக் செய்ய இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது.

Advertisement

வரவிருக்கும் Oppo Reno 3 மற்றும் Oppo Reno 3 Pro 5G ஆகியவை போஸ்டரில் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், waterdrop-style வடிவமைப்பு, பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு, 64 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 5G ஆதரவு ஆகியவற்றை Reno 3 கொண்டுள்ளது. மறுபுறம், Oppo Reno 3 Pro 5G, hole-punch டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் ஒரு குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த போன், 90Hz டிஸ்ப்ளே, 7.7mm தடிமன் மற்றும் 5G ஆதரவுடன் வழங்க பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டு போன்களும் டிசம்பர் 26-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன. Reno 3 சீரிஸுடன் இணைந்து தொடங்கவிருக்கும் Enco Free wireless earbuds-ஐயும் இந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் தங்கம், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Sony LYT-901 வந்துருச்சு! 200 மெகாபிக்ஸல்... இனி போட்டோஸ் வேற லெவல்
  2. OnePlus-ன் Performance King! Ace 6T லான்ச் தேதி கன்ஃபார்ம்! 8000mAh பேட்டரி, 165Hz டிஸ்ப்ளேன்னு செம பவர்
  3. 7000mAh பேட்டரி, 144Hz டிஸ்பிளே! Realme P4x வருது டிசம்பர் 4-ஆம் தேதி! காத்திருங்கள்
  4. WhatsApp-ல் உங்களுக்குப் பிடிச்ச AI Bot-க்கு டாட்டா! Meta AI மட்டும்தான் இனி உள்ளே வர முடியும்
  5. Xiaomi 17 Ultra டெலிஃபோட்டோ லென்ஸ் மட்டும் 200MP! DSLR-ஐ ஓரங்கட்டப் போற Xiaomi-யின் அடுத்த பிளான்
  6. POCO C85 5G: Dimensity 6100+, ஃப்ரண்ட் டிசைன் லீக் - இந்தியா வருகை உறுதி!
  7. சார்ஜ் பத்தி கவலையே வேணாம்! OnePlus Ace 6 Turbo-வில் 9,000mAh பேட்டரி! Snapdragon 8s Gen 4 பவர் வேற!
  8. Nord 4 யூசர்ஸ் கொண்டாடுங்க! OxygenOS 16 அப்டேட் வழியா AI மோட், புது Widget-கள், செம கஸ்டமைசேஷன் ஆப்ஷன்ஸ் கிடைச்சுருக்கு
  9. Google Circle to Search-ல இப்படி ஒரு பவர் கிடைச்சுருக்கு! AI மோட் மூலமா இனி நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் டக்குனு பதில்!
  10. வருத்தம் தரும் செய்தி! நம்ம டெய்லி Chat-க்கு ஹெல்ப் பண்ண Microsoft Copilot AI, வாட்ஸ்அப்-ல இருந்து விலகுறாங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.