ஓப்போ தன் புதிய ஸ்மார்ட்போன் ஆன ஓப்போ A5s-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 9,999 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை ஆக உள்ளது
ஓப்போ தன் புதிய ஸ்மார்ட்போன் ஆன ஓப்போ A5s-ஐ சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் வந்த ஓப்போ A3s போலவே, தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 2 GB ரேம் + 32 GB சேமிப்பு வசதி மற்றும் 4 GB ரேம் + 64 GB சேமிப்பு வசதி ஆகிய இரண்டு வகைகளில் சந்தைக்கு வந்துள்ளது.
6.20-இன்ச் திரை, அண்ட்ராய்டு 8.1 ஓரியோ, 13 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் பின்புற கேமரா, 8 மெகா பிக்சல் முன்புற கேமரா, 4230 mAh பேட்டரி, 2 GB ரேம், 32 GB சேமிப்பு வசதி ஆகிய அம்சங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 9,999 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை ஆக உள்ளது. இந்த போன் கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் சந்தைகளில் கிடைக்கும் என ஓப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் இன்னொரு வகையான 4 GB ரேம் + 64 GB சேமிப்பு வசதி கொண்ட போன் பச்சை மற்றும் தங்க வண்ணங்களில் கிடைக்கும் என அறிவித்த ஓப்போ நிறுவனம் அதன் விலையை இன்னும் அறிவிக்கவில்லை.
தற்போது ஒரு பட்ஜெட் போன் பத்தாயிரம் ரூபாயில் வாங்க வேண்டும் என்றால், பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஸ்னேப்ட்ராகன் 450 அல்லது மீடியாடெக் ஹெலியோ P35 ஆகிய இரு அமைப்புகளை கொண்டே அமைந்திருக்கும். அதே போலதான் இந்த ஸ்மார்ட்போனும் மீடியாடெக் ஹெலியோ P35-ஐ கொண்டே இயங்குகிறது. இதற்கு முன்பு ஓப்போ வெளியிட்ட A3s அனைத்து வகைகளிலும் A5s போன்றே இருந்தாலும் இந்த அமைப்பில் மட்டும் வேறுபட்டிருக்கிறது. A3s போனும், ஸ்னேப்ட்ராகன் 450 அமைப்பை கொண்டே இயங்கி வருகிறது. ஆனால் இவை இரண்டிற்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் வேகம். மீடியாடெக் ஹெலியோ P35 செயலி 2.3GHz வேகம் கொண்டது. ஆனால், ஸ்னேப்ட்ராகன் 450 1.8GHz வேகத்துடனேயே செயல்படுகிறது. அந்த விதத்தில் ஒப்பிடுகையில் A5s சற்றே மேம்பட்ட ஸ்மார்ட் போனாகும். தற்போது சந்தையில் உள்ள A3s 3GB ரேம் + 32 GB சேமிப்பு வசதி வகை கொண்ட ஸ்மார்ட்போனின் விலை 10,999 ரூபாய் ஆகும்.
170 கிராம் இடை, 4G LTE, வை-பை மற்றும் ப்ளூடூத், 19:9 விகிதம் கொண்ட திரை, அண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றம் 2 GB ரேம் + 32 GB சேமிப்பு வசதி ஆகிய அம்சங்களை கொண்டு சந்தையில் உள்ள மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பத்தாயிரம் ருபாய்க்கு, ஓப்போ A5s ஒரு நல்ல பட்ஜெட் ஸ்மார்ட்போன்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Oppo Reno 15 Series India Launch Timeline Leaked; Reno 15 Mini Also Expected to Debut