ஒன் பிளஸ் போன்களை பெரும்பான்மையான மக்கள் வாங்க விரும்பும் நிலையில், 5ஜி போன்களை அடுத்த ஆண்டு வெளியிட முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் அவர்களின் நிர்வாக கூட்டத்தில் 5ஜி போனின் புகைப்படம் மற்றும் ஒன் பிளஸ் நிறுவனர் பீடீ லாவூ அதை பயன்படுத்துவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்பற்றி ஒன் பிளஸ் நிறுவனத்தின் சார்பாக வந்த அறிக்கைப்படி 5ஜி போன்கள், 6டீ வரிசையில் வெளியிடப்படாது என கூறினர். மேலும் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் நிலையில் விலையும் சற்று உயர்ந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் வெளியான 6 டீ வகை ஸ்மார்ட்போனில் இரண்டு சென்சார்கள் இருந்த நிலையில் வரவுள்ள 5ஜி போனில் எத்தனை சென்சார்கள் இருக்கும் என பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்பொழுது வெளியானது புரோட்டோ டைப் ஆக மட்டும் இருக்கலாம் என்னும் போனை முறையாக லான்ஞ் செய்யும் நேரத்தில் முற்றிலுமாக மாற்றப்பட்டு, புதிதாக வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்கப்படுகிறது.
மேலும் ஓன் பிளஸ் சார்பில் வந்த தகவல் படி, 5 ஜி போன்களை யூ.கே நட்பு நிறுவனத்துடன் இணைந்து வெளியிட தீர்மானித்துள்ளது. ஒன் பிளஸ் போனை வரும் மே 2019 இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறினார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்