ஒன்பிளஸ் 7 போனில், 6.4 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ போனில் 6.64 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: OnePlus
4,000 எம்.ஏ.எச் பேட்டரி பவர் மற்றும் 30w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை ஒன்பிளஸ் 7 வரிசை போன்கள் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ போன்கள் எப்போது வெளிவரும் என்பது குறித்து இன்று அதிகாரபூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும். இந்நிலையில், ரிலீஸ் தேதியை அறிவிக்கும் முன்னரே ஒன்பிளஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ பீட் லாவ், ‘இந்த போன்களில் இருக்கும் ஸ்கிரீன்களுக்கு பிரத்யேக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது கொஞ்சம் விலை உயர்ந்ததுதான். ஆனாலும், ரிசல்ட் மிகச் சிறப்பானதாக இருக்கும்' என்று உறுதியளித்துள்ளார். மேலும் இரண்டு போன்களிலும் 5ஜி சப்போர்ட் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு போன்களின் டிஸ்ப்ளே தொழில்நுட்பம் குறித்து பீட் லாவ், ‘பொதுவாக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் திரை தொழில்நுட்பத்தை விட, இந்த புதிய தொழில்நுட்பத்தினால் 300 சதவிகிதம் வரை செலவு அதிகரிக்கும். ஆனால், வேகமாக மற்றும் ஸ்மூத்தான செயல்பாட்டை இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் அடைய முடியும். இந்த தொழில்நுட்பத்தை முதன் முறையாக பார்த்தபோது, நானே அதிர்ச்சியடைந்தேன்' என்று கூறியுள்ளார்.
6.64 QHD+ சூப்பர் ஆமோலெட் கர்வ்டு திரை கொண்ட டிஸ்ப்ளேவை ஒன்பிளஸ் 7 போன்கள் கொண்டிருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 7, ஒன்பிளஸ் 7 ப்ரோ-வில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
போனின் உட்கட்டமைப்பு அம்சங்கள் குறித்து இதுவரை நமக்குக் கிடைத்த தகவல்படி, டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே, 6.64 இன்ச் சூப்பர் ஆப்டிக் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ராசெஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி, மூன்று ரியர் கேமரா செட்-அப், பாப் அப் செல்ஃபி வசதி, ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள், வயர்-லெஸ் இயர் பட்ஸ் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் 7 போனில், 6.4 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ போனில் 6.64 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 4,000 எம்.ஏ.எச் பேட்டரி பவர் மற்றும் 30w ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை ஒன்பிளஸ் 7 வரிசை போன்கள் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed