ஒன்பிளஸ் பட்ஸ் இயர்போனை வெறும் பத்து நிமிடம் சார்ஜ் போட்டாலே போதும், 10 மணி நேரம் வரையில் தொடர்ந்து செயல்படும்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பட்ஸ் இயர்போன் அறிமுகமாகிறது
ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் நாளை அறிமுகமாகவுள்ள நிலையில், முதன்முதலாக ஒன்பிளஸ் ட்ரூ பட்ஸ் இயர்போனும் அறிமுகமாகிறது.
ஸ்மார்ட்போனில் தரத்திற்குப் பெயர் பெற்றது ஒன்பிளஸ் நிறுவனம். இந்நிறுவனம் அண்மைக்காலமாக ஆடியோ தொழில்நுட்பத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், இதுவரையில் வயர் இயர்போன், கழுத்தில் மாட்டக்கூடிய நெக் பேண்டு இயர்போன் ஆகியவற்றை மட்டுமே அறிமுகம் செய்து வந்தது.
இந்நிலையில், தற்போது முதன்முறையாக வயர்லெஸ் பட்ஸ் இயர்போனை ஒன்பிளஸ் அறிமுகம் செய்கிறது. ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் நாளை (ஜூலை 21) அறிமுகமாகிறது. இதே நிகழ்ச்சியில் ட்ரூ வயர்லெஸ் இயர்போனும் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் இதுவே ஆகும். இதற்கு முன்பு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒன்பிளஸ் புல்லடஸ் வயர்லெஸ் இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், கடந்தாண்டு ஒன்பிளஸ் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட போது, வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகமாகும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அதற்குப் பதிலாக நெக்பேண்டு - புல்லட்ஸ் வயர்லெஸ் 2 இயர்போன் அறிமுகமானது. ஆனால், தற்போது ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனுடன் ட்ரூ பட்ஸ் இயர்போன் அறிமுகம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே இந்த ரகத்தில் முதல் பட்ஸ் ஆகும். இதுகுறித்து கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் ட்ரூ பட்ஸ் கருப்பு நிற வேரியண்டுகளில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 5,000 ரூபாய் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதிலுள்ள சிறப்பம்சமே இதன் பேட்டரி சக்திதான். வெறும் பத்து நிமிடம் சார்ஜ் போட்டாலே போதும், 10 மணி நேரம் வரையில் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டது. ஒன்பிளஸ் ஆன்லைன், ஆஃப்லைன், அமேசான் ஆன்லைன் ஆகியவற்றில் இந்த ட்ரூ பட்ஸ் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Is OnePlus 8 Pro the perfect premium phone for India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999