OnePlus Ace 6 சீனாவில் வெளியீடு! இந்த மொபைல் 7,800mAh பேட்டரி, Snapdragon 8 Elite சிப்செட், மற்றும் 165Hz டிஸ்ப்ளேவுடன் வருகிறது
Photo Credit: weibo / OnePlus
OnePlus Ace 6: 7800mAh, Snapdragon 8 Elite, 165Hz AMOLED, 50MP கேமரா
இப்போ OnePlus நிறுவனம் தனது புதிய OnePlus Ace 6 ஃபோனை சீனாவில் லான்ச் செஞ்சு, டெக் உலகை மிரட்டி இருக்கு. இந்த மொபைல் இந்திய மார்க்கெட்டில் OnePlus 15R என்ற பெயரில் வர வாய்ப்பு இருக்குன்னு சொல்லப்படுது. இந்த போனோட ஸ்பெக்ஸ் எல்லாம் பார்த்தா, கேமிங் லவ்வர்ஸ்க்கு இது ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். முதல்ல, இந்த மொபைலோட மிகப்பெரிய பலம் அதோட பேட்டரிதான். இந்த Ace 6-ல, இந்த செக்மெண்டிலேயே அதிகபட்சமா 7,800mAh பேட்டரியை கொடுத்திருக்காங்க! எவ்வளவு கேம் ஆடினாலும், இது நாள் முழுக்க தாக்குப் பிடிக்கும்னு சொல்றாங்க. அதோடு, 120W ஃபாஸ்ட் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் இருப்பதால், சீக்கிரமா சார்ஜ் பண்ணிக்கவும் முடியும். ஆனா, இதுல வயர்லெஸ் சார்ஜிங் வசதி மட்டும் இல்லை.
அடுத்ததா, இதோட பெர்ஃபார்மன்ஸ். இந்த போன், சமீபத்திய ஃபிளாக்ஷிப் சிப்செட்டான Snapdragon 8 Elite-ஐ மையமா வச்சு இயங்குது. அதுமட்டுமில்லாம, கிராபிக்ஸ் மற்றும் கேமிங் டாஸ்க்ஸ்களை சிறப்பா கையாள, ஒரு தனி G2 கேமிங் சிப்பையும் இதுல இணைச்சிருக்காங்க. இது, கேமிங் பெர்ஃபார்மன்ஸை உச்சத்துக்குக் கொண்டு போகும். இதுல அதிகபட்சமா 16GB LPDDR5X RAM மற்றும் 512GB UFS 4.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களும் இருக்கு.
இந்த மொபைலோட டிஸ்ப்ளே இன்னொரு ஹைலைட். 6.83-இன்ச் அளவுள்ள 1.5K ரெசல்யூஷன் கொண்ட ஃபிளாட் AMOLED ஸ்கிரீன் இது. இதன் ரெஃப்ரெஷ் ரேட் 165Hz! இதுதான் இதோட ஸ்பெஷல். அதனால, கேம் விளையாடும்போது அனிமேஷன்கள் ரொம்பவே மிருதுவாக இருக்கும். 5,000 nits பீக் பிரைட்னஸ் இருப்பதால், வெயில்ல கூட டிஸ்ப்ளே நல்லா தெரியும். பயோமெட்ரிக் செக்யூரிட்டிக்காக இன்-டிஸ்ப்ளே 3D கைரேகை ஸ்கேனரும் இருக்கு.
கேமராவைப் பொறுத்தவரைக்கும், பின்பக்கம் டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கு. இதில் 50-மெகாபிக்சல் மெயின் கேமரா (OIS வசதியுடன்) மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் ஆகியவை உள்ளன. முன்பக்கம் செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 16-மெகாபிக்சல் கேமரா இருக்கு.
இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸுக்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K போன்ற மல்டிபிள் ரேட்டிங்ஸ் உடன் வருவது கூடுதல் பலம்.
இப்போ, ரொம்ப முக்கியமான விலை என்னன்னு பார்ப்போம். இந்த OnePlus Ace 6-ன் ஆரம்ப விலை சீனாவில் CNY 2,599 (இந்திய மதிப்பில் சுமார் ₹32,300). 16GB RAM + 1TB ஸ்டோரேஜ் கொண்ட டாப் எண்ட் மாடல் சுமார் ₹48,400 வரைக்கும் வருது. இது Quicksilver, Flash White, மற்றும் Black ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்குது.
OnePlus நிறுவனம் ஒரு ஃப்ளாக்ஷிப்-ல இருக்க வேண்டிய சிப்செட், மற்றும் ஒரு கேமிங் போன்ல இருக்க வேண்டிய பேட்டரியையும், டிஸ்ப்ளேவையும் ஒண்ணு சேர்த்து இந்த Ace 6-ஐ கொடுத்திருக்கு. இது இந்தியாவுக்கு வரும்போது ₹35,000 பட்ஜெட்டில் ஒரு சிறந்த தேர்வாக அமையும்னு எதிர்பார்க்கலாம். இந்த போன் பத்தி உங்க கருத்து என்ன? நீங்க இதை வாங்குவீங்களா? கமென்ட்ஸ்ல சொல்லுங்க.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Nothing Deals Revealed for Phone 4 Series, CMF Buds Lineup, More Ahead of Flipkart's Big Billion Days Sale