Photo Credit: OnePlus
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus Ace 5 Pro செல்போன் பற்றி தான்.
OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 சீனாவில் சீனாவில் டிசம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த செல்போன்கள் 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி வரை சேமிப்பகத்துடன் வருகின்றன. இவை 1.5K தெளிவுத்திறனுடன் 6.78-இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. OnePlus Ace 5 Pro மாடல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் எக்ஸ்ட்ரீம் எடிஷன் SoC மூலம் இயக்கப்படுகிறது. அதே சமயம் ஏஸ் 5 ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்பைக் கொண்டுள்ளது. அவை 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா உடன் சேர்த்து மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. OnePlus Ace 5 Pro மற்றும் Ace 5 ஆகியவை சீனாவில் மட்டும் இப்போது கிடைக்கின்றன.
OnePlus Ace 5 Pro விலையானது 12GB RAM + 256GB மெமரி மாடல் இந்தியா மதிப்புக்கு ரூ. 39,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16GB ரேம் + 256GB மெமரி, 12GB ரேம் + 512GB மெமரி, 16GB ரேம் + 512GB மெமரி மற்றும் 16GB ரேம் + 1TB மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 42,000, ரூ. 46,000, ரூ. 49,000, ரூ. 54,000 மற்றும் ரூ.99,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது ஸ்டார்ரி பர்பிள், சப்மரைன் பிளாக் மற்றும் ஒயிட் மூன் பீங்கான்-பீங்கான் வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது. பேசிக் மாடல் 16ஜிபி + 512ஜிபி மாடல் ரூ. 50,000 16ஜிபி + 1டிபி மெமரி மாடல் ரூ. 56,000 விலையில் கிடைக்கிறது. இது வைட் மூன் பீங்கான்-செராமிக் என சிறப்பு கலர் ஆப்ஷனில் கிடைக்கிறது.
இரட்டை நானோ சிம் கொண்டவை. OnePlus Ace 5 Pro மற்றும் Ace 5 ஆகியவை Android 15 உடன் சேர்த்து ColorOS 15.0 மூலம் இயங்குகின்றன. இது 6.78-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே 93.9 சதவீத டிஸ்பிளே, பாடி விகிதத்துடன் வருகிறது. 450ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. உலோக நடுத்தர சட்டகம் மற்றும் கண்ணாடி பின்புறம் உள்ளன. அவற்றில் மூன்று-நிலை எச்சரிக்கை ஸ்லைடர் அடங்கும்.
OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 ஆகியவை OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் ஒரே மாதிரியான மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. கேமரா அமைப்பில் ஆட்டோஃபோகஸுடன் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, அவை முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் சென்சார் உடன் வருகின்றன.
OnePlus Ace 5 Pro மற்றும் OnePlus Ace 5 இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 5.4, Beidou, GLONASS, Galileo, GPS மற்றும் NFC ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்