இந்த ஒன்ப்ளஸ் 7 ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ளது.
அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ் தளங்களில் வெளியாகவுள்ள ஒன்ப்ளஸ் 7
ஒன்ப்ளஸ் நிறுவனம் முன்னதாக மே மாதம் 14-ஆம் தேதி, தன் புதிய ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்தியாவில் பெங்களூரு அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்களில், ஒன்ப்ளஸ் 7 Pro, அறிமுகமான அந்த வாரமே விற்பனைக்கு வந்தது. ஒன்ப்ளஸ் 7-ன் விற்பனை ஜூன் மாதத்தில் துவங்கும் என அறிவித்த ஒன்ப்ளஸ் நிறுவனம், தேதி குறிப்பிடாமல் இருந்தது. இன்னிலையில் ஒன்ப்ளஸ் 7 ஜூன் 4 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது என அறிவித்துள்ளது இந்த நிறுவனம்.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைக்கென பிரத்யேகமாக ஒரு பக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமேசான் நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 4-ஆம் தேதி அன்று வெளியாகும் என்ற தகவலை உறுதி படுத்தியுள்ளது.
ஒன்ப்ளஸ் 7: விலை என்ன, எங்கு பெறலாம்?
6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகளில் மட்டுமே வெளியாகியுள்ளது இந்த ஒன்ப்ளஸ் 7 ஸ்மார்ட்போன். இதில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஒன்ப்ளஸ் 7-ன் விலை ரூபாய் 32,999 . அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு அளவுகொண்ட ஒன்ப்ளஸ் 7-ன் விலை ரூபாய் 37,999 என அறிவித்துள்ளது. 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) வண்ணத்திலும் 8GB RAM + 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என அறிவித்துள்ளது ஒன்ப்ளஸ் நிறுவனம்.
அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் ஆன்லன் தளங்கள், ஒன்ப்ளஸ்-ன் கடைகள் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் பங்குதாரர் நிறுவனங்களின் கடைகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவுள்ளது.
ஜியோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 9,300 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்ப்ளஸ் 7: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராஉட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பைக்கொண்ட இந்த ஸ்மார்போன் ஆக்சிஜன் ஓ எஸ்(OxygenOS) கொண்டு செயல்படும். 8GB வரையிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகவுள்ளது.
6.41-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 7-னில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) கொண்டு வெளியாகவுள்ளது. மேலும் 19.5:9 என்ற திரை விகிதத்தையும், 402ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 6 பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஜென் மோட், மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதியும் உள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 48 மேகாபிக்சல் மற்றும் 5 மேகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த இரண்டு கேமராக்கள். இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா இருக்கும். இந்த செல்பி கேமரா, முன்பகுதியில் ஒரு சிறய நாட்ச் கொடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒன்ப்ளஸ் 7-வில் 3700mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 20(5V/ 4A) கொண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. 157.7x74.8x8.2mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 182 கிராம் எடை கொண்டுள்ளது.
இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டும் வெளியாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Redmi Note 15 Pro Series Colourways and Memory Configurations Listed on Amazon
BSNL Bharat Connect Prepaid Plan With 365-Day Validity Launched; Telco's BSNL Superstar Premium Plan Gets Price Cut
Samsung Galaxy S26 Series Listed on US FCC Database With Support for Satellite Connectivity