இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளது. சரியான தேதி குறிப்பிடப்படவில்லை
ஒன்ப்ளஸ் 7 Pro-வே பல அம்சங்களை கொண்டுள்ள ஒன்ப்ளஸ் 7
ஒன்ப்ளஸ் நிறுவனம், தன் அடுத்த ஸ்மார்ட்போன்களான ஒன்ப்ளஸ் 7 மற்றும் ஒன்ப்ளஸ் 7 Pro, ஆகிய ஸ்மார்ட்போன்களை செவ்வாய்க்கிழமையான நேற்று வெளியிட்டது. பெங்களூரு, நியூயார்க் மற்றும் லண்டன் ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய இந்த நிறுவனம், பெங்களூருவில், இந்திய நேரப்படி நேற்று இரவு 8.15 மணிக்கு இந்த நிகழ்ச்சியினை துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்ப்ளஸ் 7, FHD+ திரை, சிறிய அளவுலான நாட்ச் கொண்ட திரை, 8GB வரையிலான RAM என பல அம்சங்களை கொண்டு வெளியாகியுள்ளது. ஒன்ப்ளஸ் 7 Pro போன்று 12GB வரையிலான RAM அளவு இல்லை என்றாலும், இந்த ஸ்மார்ட்பொன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வெளியான இந்த ஸ்மார்ட்போனின் விலை, சிறப்பம்சங்கள் என்னென்னெ? எப்போது இந்தியாவில் வெளியாகவுள்ளது?
ஒன்ப்ளஸ் 7: விலை மற்றும் விற்பனை துவங்கும் நாள்!
6GB RAM + 128GB சேமிப்பு மற்றும் 8GB RAM + 256GB சேமிப்பு அளவு என இரண்டு வகைகளில் மட்டுமே வெளியாகியுள்ளது இந்த ஒன்ப்ளஸ் 7 ஸ்மார்ட்போன். இதில் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட ஒன்ப்ளஸ் 7-ன் விலை ரூபாய் 32,999 . அதே நேரம் 8GB RAM + 256GB சேமிப்பு அளவுகொண்ட ஒன்ப்ளஸ் 7-ன் விலை ரூபாய் 37,999 என அறிவித்துள்ளது. 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) வண்ணத்திலும் 8GB RAM + 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) மற்றும் சிவப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் ஆன்லன் தளங்கள், ஒன்ப்ளஸ்-ன் கடைகள் மற்றும் ஒன்ப்ளஸ்-ன் பங்குதாரர் நிறுவனங்களின் கடைகளில் கிடைக்கப்பெரும் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளது என குறிப்பிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 9,300 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்ப்ளஸ் 7: சிறப்பம்சங்கள்!
இரண்டு நானோ சிம் வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராஉட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பைக்கொண்ட இந்த ஸ்மார்போன் ஆக்சிஜன் ஓ எஸ்(OxygenOS) கொண்டு செயல்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் திரை FHD+ (1080x2340 பிக்சல்கள்) கொண்ட திரை அமைப்பை கொண்டுள்ளது. 8GB வரையிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டு வெளியாகவுள்ளது
6.41-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 7-வில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) கொண்டு வெளியாகவுள்ளது. மேலும் 19.5:9 என்ற திரை விகிதத்தையும், 402ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 6 பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஜென் மோட், மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதியும் உள்ளது.
இரண்டு பின்புற கேமராக்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 48 மேகாபிக்சல் மற்றும் 5 மேகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த இரண்டு கேமராக்கள். இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா இருக்கும். இந்த செல்பி கேமரா, முன்பகுதியில் ஒரு சிறய நாட்ச் கொடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒன்ப்ளஸ் 7-வில் 3700mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 20(5V/ 4A) கொண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. 157.7x74.8x8.2mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 182 கிராம் எடை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டும் வெளியாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Vivo Buds Clip Launch Date Confirmed for September 21, Colour Options Revealed