தற்போது விற்பனையில் 'ஒன்ப்ளஸ் 7 - மிரர் ப்ளூ' வகை: விலை என்ன?

தற்போது விற்பனையில் 'ஒன்ப்ளஸ் 7 - மிரர் ப்ளூ' வகை: விலை என்ன?

ஒன்ப்ளஸ் 7 ஸ்மார்ட்போனின் 'மிரர் ப்ளூ' வகை

ஹைலைட்ஸ்
  • இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்டு விற்பனையாகிறது
  • ப்ரைம் வாடிக்கையாளர் அமேசானில் இந்த ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம்
  • 15,500 ரூபாய் அளவிற்கு எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் உள்ளன

'மிரர் ப்ளூ' வண்ணம் கொண்ட 'ஒன்ப்ளஸ் 7' ஸ்மார்ட்போன், அமேசானில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. அமேசான் ப்ரைம் டே 2109 விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது. முன்னதாக, இந்த ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் கடந்த மே மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்போனில், 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) வண்ணத்திலும் 8GB RAM + 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) மற்றும் சிவப்பு (Red) என இரண்டு வண்ணங்களிலும் அறிமுகமானது. இந்த புதிய வண்ண ஸ்மார்ட்போன் 6GB RAM மற்றும் 128GB சேமிப்பு என்ற அளவுகளை கொண்டுள்ளது.

'ஓன்ப்ளஸ் 7' - 'மிரர் ப்ளூ' வகை: விலை, விற்பனை!

அமேசான் ப்ரைம் டே விற்பனை, இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட இந்த  மிரர் ப்ளூ (Mirror Blue) வண்ண 'ஓன்ப்ளஸ் 7' ஸ்மார்ட்போனின் விலை 32,999 ரூபாய். அதுமட்டுமின்றி எச்.டி.எஃப்.சி கார்டுகளுக்கு 3,500 ரூபாய் தள்ளுபடி.

முன்னதாக 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட 'ஒன்ப்ளஸ் 7' ஸ்மார்ட்போன் 32,999 ரூபாய் என்ற விலையிலும், 8GB RAM + 256GB சேமிப்பு அளவு கொண்ட 'ஒன்ப்ளஸ் 7' ஸ்மார்ட்போன் 37,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமானது. 6GB RAM + 128GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) வண்ணத்திலும் 8GB RAM + 256GB சேமிப்பு வகை கொண்ட ஸ்மார்ட்போன் சாம்பல் (Mirror Grey) மற்றும் சிவப்பு (Red) ஆகிய இரண்டு வண்ணங்களிலும் அறிமுகமானது.

ஒன்ப்ளஸ் 7: சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதியை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அண்ட்ராஉட் 9.0 பை(Android 9.0 Pie) அமைப்பைக்கொண்ட இந்த ஸ்மார்போன் ஆக்சிஜன் ஓ எஸ்(OxygenOS) கொண்டு செயல்படும். 8GB வரையிலான RAM கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஸ்னேப்ட்ராகன் 855 எஸ் ஓ சி ப்ராசஸர் கொண்டுள்ளது.

6.41-இன்ச் FHD+ திரையை கொண்டிருக்கும் இந்த ஒன்ப்ளஸ் 7-னில் 90Hz திரை புதுப்பிப்பு விகிதம்(refresh rate) கொண்டு வுள்ளது. மேலும் 19.5:9 என்ற திரை விகிதத்தையும், 402ppi பிக்சல் டென்சிடியையும் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கொரில்லா கிளாஸ் 6 பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஜென் மோட், மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் வசதியும் உள்ளது.

இரண்டு பின்புற கேமராக்களை மட்டுமே கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். 48 மேகாபிக்சல் மற்றும் 5 மேகாபிக்சல் என்ற அளவுகளை கொண்டுள்ளது இந்த இரண்டு கேமராக்கள். இந்த ஸ்மார்ட்போனில் 16 மேகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா இருக்கும். இந்த செல்பி கேமரா, முன்பகுதியில் ஒரு சிறய நாட்ச் கொடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒன்ப்ளஸ் 7-வில் 3700mAh பேட்டரி அளவு கொண்ட பேட்டரி, டைப்-C சார்ஜ் போர்ட், அதிவேக வார்ப் சார்ஜர் 20(5V/ 4A) கொண்டு வெளியாகும் என அறிவித்துள்ளது. 157.7x74.8x8.2mm போன்ற அளவுகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 182 கிராம் எடை கொண்டுள்ளது.

இன்னும் பல வசதிகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4G VoLTE மற்றும் வை-பை வசதி கொண்டும் மற்றும் ப்ளூடூத் v5.0 கொண்டும் கொண்டுள்ளது. 

  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent performance
  • All-day battery life
  • Loud stereo speakers
  • Bad
  • Below-average low-light camera performance
  • Inconsistent focus in portraits and macros
  • Poor low-light video stabilisation
Display 6.41-inch
Processor Qualcomm Snapdragon 855
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
  1. வாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்!
  2. Realme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
  3. பட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்!
  4. சாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
  5. OnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்? முழு விவரங்கள்
  6. Moto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்!
  7. Google Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு!
  8. வந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
  9. அடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்! எவ்வளவு ரூபாய் இருக்கும்?
  10. அமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்
© Copyright Red Pixels Ventures Limited 2021. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com