பாதுகாப்பு வசதி மற்றும் டிஸ்பிளேவில் மாற்றங்களுடன் வந்துள்ளது ஓன்பிளஸ் அப்டேட்!
ஓன்பிளஸ் நிறுவனம் தனது இரண்டு முக்கிய தயாரிப்புக்களான ஓன்பிளஸ் 6 மற்றும் ஓன்பிளஸ் 6 T ஸ்மார்ட்போன்களுக்கு மென்பொருள் அப்டேட்டை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
ஓன்பிளஸ் நிறுவனம் தனது இரண்டு முக்கிய தயாரிப்புக்களான ஓன்பிளஸ் 6 மற்றும் ஓன்பிளஸ் 6 T ஸ்மார்ட்போன்களுக்கு மென்பொருள் அப்டேட்டை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஆக்சிஜன் ஓ.எஸ் அப்டேட் இன்றே பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை சென்றடையும் என்றும் அப்படி அப்டேட்டை பெறமுடியாத நிலையில் சில நாட்களுக்குள் இந்த அப்டேட் அனைத்து வாடிக்கையாளர்களையும் சென்றடையும் என்றும் நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()
ஓன்பிளஸ் 6க்கு ஆக்சிஜன் ஓஎஸ் 9.0.12 வெர்ஷன் அப்டேட் கிடைக்கும் நிலையில், ஓன்பிளஸ் 6 T போனுக்கு ஆக்சிஜன் ஓஎஸ் வெர்ஷன் 9.0.12 அப்டேட்டை பெருகிறது. பெரிய வித மாற்றம் ஏதும் இல்லை என்ற நிலையில் பாதுகாப்பு மற்றும் அமைப்புக்களில் சில மாற்றங்கள் இந்த அப்டேட் மூலம் செயல்படுத்த ஓன்பிளஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
மேலும் ஓன்பிளஸ் நிறுவனம் சார்பாக வெளியான அறிவிப்பின்படி இரண்டு அப்டேட்களும் ஏறக்குறைய ஒரே அளவு மாற்றங்களையே பெற்றுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்டேட்டை பெற ஓன்பிளஸ் 6 க்கு (138 எம்பியும்), ஓன்பிளஸ் 6 T க்கு (143 எம்பியும்) தேவைப்படும். கடந்த 2018 ஆம் ஆண்டு, மே மாதம் ஓன்பிளஸ் 6 வெளியாகிய நிலையில், சுமார் 6.28 இஞ்ச் ஹெச்டி திரையும், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் வசதியுடன் விற்பனை செய்யப்பட்டது.
அதுபோல் ஓன்பிளஸ் 6T கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான நிலையில், ஆக்டா கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி மற்றும் 6/8 ஜிபி ரேம் உடன் வெளியாகி இந்தியாவில் விற்பனையில் கலக்கியது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Galaxy S26 Series Listed on US FCC Database With Support for Satellite Connectivity