Photo Credit: Twitter/ Ishan Agarwal
ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனானது இன்று வெளியீட திட்டமிடப்பட்டுள்ளது. 30 ஆம் தேதி வெளியிட்டு நிகழச்சி நடைபெற இருந்த நிலையில், அந்த தேதியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய பொருட்கள் வெளியீட்டு விழா நிகழ்வை கொண்டுள்ளதால் தேதி ஒன்பிளஸ் வெளியிட்டு தேதி மாற்றப்பட்டு ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது நியூயார்க்கில் இன்று இரவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை இந்தியாவில் வெளியிட்டு விழா நடைபெறுகிறது.
ஒன்பிளஸ் 6T-யின் இந்த வெளியீட்டு விழாவானது இன்று இரவு 8.30 அளவில் நடைபெறுகிறது. இதற்கான நிகழ்ச்சி நடப்புகள் நேரலை செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் விலை விவரங்கள், சிறப்பம்சங்கள், தெரிவிக்கப்பட உள்ளன. மேலும் அதனை நீங்கள் கேட்ஜெட்ஸ் 360-யில் நேரடியாக தெரிந்துகொள்ளலாம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன் பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடும், இந்திய வெளியீடும் ஒரே நேரத்தில் வரும் அக்.30 ஆம் தேதி நடைபெற உள்ளது. முந்தைய மாடளுடன் ஒப்பிடுகையில், சிறு மேம்படுத்தல்களுடன் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி-யில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்பிளே உள்ளிட்ட சில மாற்றங்கள் செய்யப்படுள்ளன.
ஒன் பிளஸ் 6டி-யில் புதிய பயனர் இடைமுகம் (UI) கொண்டுள்ளது என ஒன்பிளஸ் நிர்வாகி உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், கேமராவில் சாப்ட்வேர்களும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஆனது ஆக்ஸிஜென் ஓஎஸ் இயங்குதளத்தில் இயங்குகிறது. மேலும், இதில் புதிய பயனர் இடைமுகம் (UI) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமராவின் அம்சங்களை உயர்த்தும் வகையில் பல வேலைகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் சிறப்பான புகைப்படங்களை 6டியில் பெறலாம்.
இதைத்தவிர்த்து, ஒன்பிளஸ் 6டி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் மூலம் கூடுதல் வசதிகள் கிடைக்கிறது. இது தூங்கும் நேரத்தை கணித்து பின்னால் இயங்கும் செயல்பாட்டுகளை நிறுத்தி வைக்கிறது. இதன் மூலம் பேட்டரி பவர் நுகர்வு குறைவாகிறது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் ஆண்ட்ராய்டு ஓரியோவிற்கு பதிலாக ஆண்ட்ராய்டு 9.0 பை உள்ளதாக தெரிகிறது. ஒன்பிளஸ் 6டியின் பல விளம்பர படங்கள் வெளியாகி உள்ள நிலையில், அதில் பிங்கர் பிரிண்ட் சென்சார், வாட்டர் டிராப் நாட்ச், இருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் 6டி (30ஆம்) தேதி நாளை வெளிவர உள்ளது. உலகம் முழுவதும் (அக்.29ஆம்) தேதி இன்று அறிமுகமாகிறது.
டூயல் சிம் கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ கொண்டு இயங்குகிறது. 6.41 இன்ச் புல்-எச்.டி+அமோல்ட் டிஸ்பிளை (1080x2340 பிக்ஸெல்ஸ்) 19.5:9 அக்ஸப்ட் ரேஸியோ கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 845, 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் உடன் 256 ஜிபி வரை மெமரி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பின்பக்கம் 16-மெகா பிக்ஸெல்ஸ் பிரைமரி சென்சார் மற்றும் 16-மெகா பிக்ஸெல்ஸ் செகன்டரி சென்சார் கொண்ட டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது. முன்பக்கம் 16-மெகா பிக்ஸெல்ஸ் சென்சார் கொண்டுள்ளது. மேலும் இதில், எச்டிஆர் இமேஜ் மற்றும் புதிய நைட் மோட் உள்ளது.
ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனானது 4G LTE, வைபை 802.11ac, ப்ளூடுத் v5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்ஃப்சி, யூஎஸ்பி - டைப் சி கொண்டுள்ளது. மேலும், இந்த போன் 3,700mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது என கூறப்படுகிறது. இதன் எடை 157.5*74.9*8.3mm மற்றும் 180 கிராம் ஆகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்