ஒன்ப்ளஸ் 6 ரெட் ஸ்மார்ட்ஃபோனுக்கு அமேசானில் ரூ. 2000 தள்ளுபடி

விளம்பரம்
Written by Sumit Chakraborty மேம்படுத்தப்பட்டது: 14 ஆகஸ்ட் 2018 15:53 IST
ஹைலைட்ஸ்
  • ஒன்ப்ளஸ் 6 வாங்குபவர்கள் ரூ. 2000 உடனடி தள்ளுபடி பெறலாம்
  • ஒன்ப்ளஸ் 6 அனைத்து மாடல்களும் அமேசானின் ஆஃபர் செல்லும்
  • இந்த ஆஃபர் ஹச்டிஎஃப்சி வங்கியின் கிரேடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் கிட

ஜூலை 16-ம் தேதி, இந்தியாவில் முதல்முறையாக வெளியாகும் ஒன்ப்ளஸ் 6 ரெட் மாடல் அமேசான் இந்தியா தளத்தில் ரூ. 2000 தள்ளுபடியில் கிடைக்கும். அமேசான் ப்ரைம் டே 2018ன் ஒரு பகுதியாக வருகிற இந்த ஆஃப்பரில் பயனர்கள் ஹச்டிஎஃப்சி வங்கியின் கிரேடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ரூ. 2000 தள்ளுபடி பெறலாம். கடந்த வாரம்  ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன்களில் மீது அறிவித்திருந்த ஆஃபர் ஜூலை 15ல் முடிவடைகிறது. இந்த புதிய ஆஃபர் அனைத்து ஒன்ப்ளஸ் மாடல்களுக்கும் பொருந்தும். OnePlus.in இணையத்தில் வாங்கும் போதும் ஹச்டிஎஃப்சி கிரெடிட் கார்ட் இஎம்ஐ வசதியில் ரூ. 2000 தள்ளுபடி கிடைக்கும்.

ஒன்ப்ளஸ் 6 ரெட் மாடல் இந்தியாவில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அந்நிறுவனம் ஒன்ப்ளஸ் 6 மாடல் வெளியிட்ட 22 நாட்களில் உலகளவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளதாக தெரிவித்திருந்தது. மேலும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மிட்நைட் பிளாக் (8 ஜீபி ரேம், 256 ஜீபி ஸ்டாரோஜ்), மிரர் ப்ளாக் (8 ஜீபி ரேம், 128 ஜீபி ஸ்டோரேஜ்) மற்றும் சில்க் வைட் லிமிடெட் எடிஷன் (8ஜீபி ரேம், 128 ஜீபி ஸ்டோரேஜ்) ஆகிய மாடல்களுடன் இந்த புதிய மாடல் இணைந்துள்ளது.


இந்த புதிய ஆஃபரில் அமேசான் இந்தியா தளம் மூலம் வாங்குபவர்களுக்கு ஹச்டிஎஃப்சி வங்கியின் கிரேடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இஎம்ஐ பரிவர்த்தனைகளின் மூலம் ரூ. 2000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். குறிப்பாக அமேசான் ஹச்டிஎஃப்சி வங்கியின் கிரேடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலம் பல்வேறு பொருட்களுக்கும் இந்த சேலில் 10% உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இந்த பொருட்களில் ஸ்மார்ட்டபோன்களும் அடங்கும் எனவும், என்னென்ன மாடல்கள் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என அமேசான் கேட்ஜெட்ஸ் 360யிடம் தெரிவித்தது. ஒன்ப்ளஸ் 6 ரூ. 2000 தள்ளுபடி மற்றும் 10% உடனடி தள்ளுபடி இரண்டுமே ஓரே ஆஃபர்கள் தான் எனவும், ஒரு பயனருக்கு ஒரு முறை தான் பயன்படுத்தமுடியும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சேலில் ஒரு பொருளின் மீது ஆஃபர் பயன்படுத்தினால் மற்றொரு முறை பயன்படுத்தமுடியாது.

நாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, நீங்கள் ஒன்ப்ளஸ் 6 மொபைலை வேறு தளத்தில் வாங்கினாலும் ஹச்டிஎஃப்சி கிரெடிட் கார்டின் இஎம்ஐ பரிவர்த்தனை மூலம் ரூ. 2000 தள்ளுபடி பெற முடியும்.

கூடுதலாக, ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்கள் வருகின்ற ஜூலை 10 முதல் அனைத்து பிரபலமான வங்கி கிரெடிட் கார்டுகளின் மூலம் அமேசான் தளத்தில் நோ காஸ்ட் இஎம்ஐ ஆஃப்பருக்கு தகுதியுடையவர்கள் ஆவர். ஒன்ப்ளஸ் 6 ரெட் மாடல் (8 ஜீபி ரேம் மற்றும் 128 ஜீபி ஸ்டோரேஜ்) இந்தியாவில் ரூ. 39,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃப்பர் ஜூலை 10 முதல் விற்பனைக்கு வரும் ஒன்ப்ளஸ் 6 மிட்நைட் மாடலுக்கும் பொருந்தும்.

இந்த புதிய ஹச்டிஎஃப்சி வங்கி இஎம்ஐ ஆஃப்பரைத் தவிர்த்து, வேறு பல ஆஃப்பர்களும் இருக்கின்றன. ஒன்ப்ளஸ் நிறுவனம் அதனுடைய ஒன்ப்ளஸ் 6 வாங்குபவர்களுக்கு 12 மாதம் விபத்து காப்பீடும், அமேசான் ப்ரைம் கிப்ட் கார்டு ரூ. 250, அமேசான் கிண்டிலில் ரூ. 500 வரை புத்தகம் வாங்க தள்ளுபடியும் அறிவித்துள்ளது. மேலும் ஒன்ப்ளஸ்  நிறுவனம், க்ளியர் ட்ரிப்பின் மூலம் விமானம் மற்றும் ஹோட்டல் புக்கிங்கில் ரூ. 25,000 வரை பலன்களை அறிவித்துள்ளது.

ஒன்ப்ளஸ் 6 ரெட் எடிஷனில் ஆப்டிகல் கோட்டிங், எவாபரேட்டிவ் பிலிம் மற்றும் ஆறு பேனல் க்ளாஸ்கள் கொண்டுள்ளது. அதற்கு மேல் கூடுதலாக பிரதிபலிப்பை தடுக்கும் லேயர் மேலும் வெளிச்சத்தை கீழே உள்ள அடுக்குகளை நோக்கி செலுத்துகிறது. மேலும் இதில் ஒரு கூடுதல் ஆரஞ்சு நிற லேயர் உள்ளது. சிவப்பு, கண்ணாடி போன்ற கைரேகை சென்சார் பின்புறத்தில் உள்ளது. புதிய கலர் ஆக்சண்ட தவிர்த்து ஹார்ட்வர் ஒரிஜினல் ஒன்ப்ளஸ் 6 போன்று தான் உள்ளது.

Advertisement

இதில் இரண்டு நானோ சிம் வசதி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ ஆக்சிஜன் ஓஎஸ் 5.1 ஆண்ட்ராய்டு பி அப்கிரேட் செய்யும் வசதியுடன் வருகிறது. 6.28 இன்ச் முழு ஹச்டி டிஸ்பிளே 19:9 அஸ்பெக்ட் விகிதாச்சாரத்தில் உள்ளது. குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, அட்ரினோ 630 ஜிபியு உடன் வருகிறது. மேலும் இந்த கைபேசியில் ஒரு 16-மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ்519 சென்சார் மற்றும் ஒரு எஃப் / 1.7 துளை மற்றும் ஒரு 20 மெகாபிக்சல் இரண்டாம் சோனி ஐஎம்376கே சென்சார் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இரண்டு சென்சார்கள் ஒரு இரட்டை எல்ஈடீ ஃப்ளாஷ் வசதியுடன் இருக்கிறது. செலஃபிக்களுக்கு, என எஃப் / 2.0 துளை கொண்ட 16 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்371 சென்சார் ஒன்று உள்ளது.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Looks great
  • Excellent performance
  • Useful software customisations
  • Bad
  • Average camera quality
  • No wireless charging or weatherproofing
 
KEY SPECS
Display 6.28-inch
Processor Qualcomm Snapdragon 845
Front Camera 16-megapixel
Rear Camera 16-megapixel + 20-megapixel
RAM 8GB
Storage 128GB
Battery Capacity 3300mAh
OS Android 8.1 Oreo
Resolution 1080x2280 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: OnePlus
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.