OnePlus 3 மற்றும் OnePlus 3T போன்கள் இப்போது அவற்றின் இறுதி அப்டேட்டைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. அப்டேட் அக்டோபர் ஆண்ட்ராய்டு 2019 பாதுகாப்பு இணைப்பு மற்றும் சில பிழைத் திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டுவருகிறது. OnePlus 3 ஜூன் 2016-ல் தொடங்கப்பட்டது மற்றும் OnePlus 3T நவம்பர் 2016-ல் தொடங்கப்பட்டது. OnePlus, 24 மாத வழக்கமான மென்பொருள் பராமரிப்பை வழங்குகிறது. மேலும், கூடுதலாக, 12 மாத மென்பொருள் பாதுகாப்பு பராமரிப்பு வழங்கப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு அப்டேட்கல் இரு மாதங்களுக்கு வழங்கப்படுகின்றன. 36 மாத மென்பொருள் ஆதரவின் இந்த சுழற்சி இப்போது முடிவடைகிறது.
OnePlus 3 மற்றும் OnePlus 3T-க்கான கடைசி அப்டேட்டின் முதல் கட்டம் தொடங்கியுள்ளதாக OnePlus உறுதிப்படுத்தியுள்ளதை XDA டெவலப்பர்கள் தெரிவிக்கின்றனர். அப்டேட், அக்டோபர் ஆண்ட்ராய்டு 2019 பாதுகாப்பு இணைப்பு, புதுப்பிக்கப்பட்ட கூகுள் மொபைல் சேவைகள் செயலிகல் மற்றும் சிறிய பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டுவருவதாக அப்டேட் சேஞ்ச்லாக் அறிவுறுத்துகிறது.
அனைத்து OnePlus 3 மற்றும் OnePlus 3T பயனர்களையும் சமீபத்திய அப்டேட்டைப் இன்ஸ்டால் செய்ய பரிந்துரைக்கிறோம். இதற்குப் பிறகு, OnePlus-ஆல் பாதுகாப்பு திட்டுகள் அல்லது திருத்தங்கள் எதுவும் வெளியிடப்படாது. OnePlus 3 வருட ஆதரவுக்கான தனது வாக்குறுதியை வைத்திருக்கிறது. மேலும் இது பெரும்பாலான OEMs சலுகைகல் வழங்குவதை விட அதிகம். OnePlus இந்த ஆண்டு மே மாதத்தில் இரண்டு போன்களுக்கான Android Pie அப்டேட்டைப் வெளியிட்டது. நினைவுகூர, போன்கள் Android 6 Marshmallow-வில் இயங்குமாறு அறிமுகப்படுத்தியது.
இப்போது வெளிவரும் இந்த சமீபத்திய அப்டேட்டுக்கு முன்பு, கடைசி OnePlus 3 மற்றும் OnePlus 3T அப்டேட் ஆகஸ்டில் வெளியிடப்பட்டது, மேலும் இது ஆகஸ்ட் பாதுகாப்பு இணைப்பு மற்றும் பொது பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகளையும் கொண்டு வந்தது.
போன் சார்ஜில் இருக்கும் போது மற்றும் வலுவான வைஃபை இணைப்பின் கீழும் இருக்கும்போது சமீபத்திய OnePlus 3 மற்றும் OnePlus 3T புதுப்பிப்பை இன்ஸ்டால் செய்ய வேண்டும். குறிப்பிட்டுள்ளபடி, அப்டேட்டின் முதல் கட்டம் மட்டுமே தொடங்கியுள்ளது. எனவே, எல்லா பயனர்களும் அப்டேட்டைக் காண சிறிது நேரம் ஆகும். உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கவில்லை எனில், அமைப்புகளில் மேனுவலாக சரிபார்க்கவும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்