நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus 13R செல்போன் பற்றி தான்.
OnePlus 13R இந்த ஆண்டின் தொடக்கத்தில் வந்த OnePlus 12R செல்போனுக்கு அடுத்த மாடலாக வெளியாகிறது. இதில் குறைந்தது 12ஜிபி ரேம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போன் தரப்படுத்தும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. OnePlus நிறுவனம் ஏற்கனவே OnePlus 13 மாடலை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த செல்போன் வரும் மாதங்களில் உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus 13R செல்போனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்து சில தகவல் வெளியாகி இருக்கிறது. இது நிறுவனத்தின் பிரீமியம் ரக செல்போன்களுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"OnePlus CPH2645" என்ற மாதிரி எண்ணைக் கொண்டசெல்போன் Geekbench தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் OnePlus 13R ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தால் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளில், நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. ஒரு பட்ஜெட் மாடல், இன்னொன்று விலை குறைவான பிரீமியம் மாடல்.
OnePlus 13R ஆனது Snapdragon 8 Gen 3 சிப்செட் கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய தலைமுறை OnePlus 12 மாடலை இயக்கும் அதே சிப்செட் தான் இதுவும். OnePlus 13R மாடல் குறைந்தது 12GB ரேம் கொண்டதாக இருக்கும். OnePlus 13 மாடலை போலவே, இது ஆண்ட்ராய்டு 15 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்தின் OxygenOS 15 மூலம் இயங்கும். இது அதே Android பதிப்பில் இயங்கும் மாடலாகவே இருக்கும்.
OnePlus 13R இன் பெஞ்ச்மார்க் மதிப்பெண்கள், செயல்திறனின் அடிப்படையில் அதில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய ஒரு யோசனையையும் தருகிறது. ஃபோன் சிங்கிள்-கோர் டெஸ்டில் 2,238 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 6,761 புள்ளிகளையும் பெற்றது. Geekbench தளத்தில் வெளியான தகவல் படி OnePlus 12 மாடல் உடன் ஒப்பிடுகையில் இந்த முடிவுகள் சற்று அதிகமாக உள்ளன.
ஒன்பிளஸ் 13, ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய 2 மாடல்களுமே டிடிஆர்ஏ (TDRA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. இது 6.82-இன்ச் 2கே+ LTPO AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸரை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டிருக்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்