Phone 3 யூசர்களுக்கு தீபாவளி ட்ரீட்! Nothing OS 4.0 ஸ்டேபிள் அப்டேட் ரிலீஸ்—கிட்டத்தட்ட 8 புது வசதிகள்

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 24 நவம்பர் 2025 16:15 IST
ஹைலைட்ஸ்
  • Nothing OS 4.0, Android 16 அப்டேட்டை முதலில் Phone 3-க்கே வழங்குகிறது
  • Nothing OS 4.0, Android 16 முதலில் Phone 3-க்கு மட்டுமே கிடைக்கும்
  • Glyph இனால் முக்கிய தகவல்கள் உடனே தெரிவதும் எளிதாகிறது

Nothing OS 4.0 Phone 3-ல் Android 16, புதிய Glyph, Dual Window, AI அம்சங்கள்

Photo Credit: Nothing

நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச Nothing கம்பெனி, தன்னோட யூனிக்கான டிசைனுக்கும், போனுக்கும் எவ்வளவு ஃபேமஸ்ன்னு. இப்ப அந்த கம்பெனில இருந்து அவங்களோட Nothing OS-ல அடுத்த பெரிய பாய்ச்சலா Nothing OS 4.0 அப்டேட்ட இப்போ Phone (3) யூசர்களுக்கு வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. இது வெறும் சாதாரண அப்டேட் இல்லை. இது லேட்டஸ்ட் Android 16 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாக் கொண்டு உருவாகியிருக்கு. இந்த அப்டேட் ரொம்பவே வேகமாகவும், ஸ்மார்ட்டாகவும், அனுபவத்தை மையப்படுத்தியும் (Experience-Led) வடிவமைக்கப்பட்டிருக்குன்னு கம்பெனி சொல்லியிருக்காங்க.

இந்த 4.0 வெர்ஷன்ல என்னென்ன இருக்குன்னு பார்த்தா, முதல்ல விஷுவல்ஸ் ரொம்பவே சுத்தமா இருக்கு. ஸ்டேட்டஸ் பாரில் (Status Bar) இருக்கிற ஐகான்கள் புதுசா டிசைன் செய்யப்பட்டிருக்கு. ஃபர்ஸ்ட்-பார்ட்டி ஆப் ஐகான்கள் (First-Party App Icons) எல்லாம் மினிமலிஸ்டிக்கா, பார்க்கவே ரொம்ப நீட்டா இருக்கு. லாக்க் ஸ்க்ரீன் பாஸ்வேர்டு போடுற இன்டெர்ஃபேஸ் கூட ரொம்ப சிம்பிளாக்கப்பட்டிருக்கு. சிஸ்டத்தோட அனிமேஷன்கள் (System Animations) எல்லாமே முன்ன விட ரொம்ப ஸ்மூத்தா இருக்குறதுனால, போனை யூஸ் பண்ணவே ஒரு சரளத்தன்மை கிடைக்கும். மேலும், இதுல Extra Dark Mode-ஐ இன்னும் ஆழமாக்குனதுனால, நைட்ல போன் பார்க்கும்போது கண்ணுக்கு எந்த சிரமமும் இருக்காது.

ஹைலைட்டே Glyph Interface தான்

யூசர்களோட கருத்துக்களை வாங்கி, மல்டிடாஸ்கிங்கை (Multitasking) இன்னும் பெட்டரா ஆக்கியிருக்காங்க. இப்போ பாப்-அப் வியூவ் (Pop-up View) இன்னும் மெருகேற்றப்பட்டு, ஒரே நேரத்துல ரெண்டு ஆப்ஸ்களை மிதக்கும் விண்டோவால (Dual Windows) பயன்படுத்த முடியும். க்விக் செட்டிங்ஸ் டைல்ஸ்கள் (Quick Settings Tiles) 2x2 என்ற புது லே-அவுட்ல வந்துருக்கு. இதோட இல்லாம, அதிக விட்ஜெட் சைஸ்களும் (Widget Sizes) கொடுக்கப்பட்டிருக்கு. யாருக்கும் தெரியாம ஆப்ஸை மறைச்சு வைக்கணும்னா, ஆப் டிராயர்லேயே (App Drawer) மறைச்சு வைக்கிற வசதியும் வந்திருக்கு. எல்லாத்தையும் ஈஸியா தேட Universal Search Settings-ம் வந்திருக்கு.

இந்த அப்டேட்ல முக்கியமான ஹைலைட்டே Glyph Interface தான். இப்போ இதுல Live Updates வசதி கொடுத்திருக்காங்க. நீங்க ஏதாவது ரைடு புக் பண்ணிருந்தா, இல்லனா உணவு டெலிவரி ஆர்டர் பண்ணியிருந்தா, இல்லனா டைமர் வெச்சிருந்தா, அந்த தகவல்களை போன் ஸ்க்ரீன் இல்லாம, பின்னாடி இருக்கிற Glyph Lights மூலமாவே தெரிஞ்சுக்க முடியும். புதிய AI Features பக்கம் வந்தா, கோடிங் இல்லாமலே விட்ஜெட்களை உருவாக்க Playground என்ற வசதி இருக்கு. Essential Memory என்ற AI அம்சம் வரப்போகுது. இது நீங்க சேமிச்ச விஷயங்களை கேள்விகள் மூலமா தேடி எடுக்க உதவுமாம். Phone (3) யூசர்களுக்கு பிரத்யேகமா Glyph Mirror Selfie, ஸ்மார்ட்டான Flip to Glyph, பாக்கெட் மோட் (Pocket Mode) மற்றும் புதிய Glyph Toys-ம் கொடுத்திருக்காங்க. இப்போதைக்கு Phone (3)-க்கு மட்டும் வந்துருக்கு. அடுத்த சில வாரங்கள்ல மத்த Nothing ஸ்மார்ட்போன்களுக்கும், அப்புறம் CMF போன்களுக்கும் இந்த அப்டேட் வரும்னு சொல்லியிருக்காங்க.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , Nothing, Android 16

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. மிரட்டலான 7600mAh பேட்டரி.. 200MP கேமரா! iQOO Z11 Turbo-வின் சிறப்பம்சங்கள் லீக் - இந்தியாவிற்கு iQOO 15R ஆக வருமா?
  2. லேப்டாப் ஸ்க்ரீன் இப்போ விரியும்! லெனோவாவின் மேஜிக் Rollable Laptop மற்றும் SteamOS-ல் இயங்கும் Legion Go 2
  3. சாம்சங்குக்கு சரியான போட்டி! மோட்டோரோலாவின் புதிய 'மெகா' ஃபோல்டபிள் போன் - இதோ சிறப்பம்சங்கள்!
  4. ஷாக் பிரைஸ்! பட்ஜெட் விலையில் லெய்கா கேமரா போன் - சியோமி 14 சிவி அதிரடி விலைக்குறைப்பு
  5. சாம்சங் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்! ஒரு லட்ச ரூபாய் போன் இப்போ வெறும் ரூ. 66,885-க்கு? அமேசான் ஆஃபர் விவரம்
  6. கரண்ட் மிச்சம், காய்கறி பிரெஷ்! ஹையர் கொண்டு வந்த புது ரக பிரிட்ஜ் - இதோ முழு விபரம்!
  7. நத்திங் (Nothing) பிராண்டின் அதிரடி! பட்ஜெட் விலையில் ஹெட்ஃபோன் மற்றும் வாட்ச் வருது
  8. டிசைன்ல சொக்க வைக்கும் Realme 16 Pro Series! கேமரால மிரட்டுது, விலையில அதட்டுது! முழு விபரம் உள்ளே
  9. Redmi-யின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்! 200MP கேமரா, வேற லெவல் டிஸ்ப்ளே - Redmi Note 15 5G முழு விவரம் இதோ
  10. இது போன் இல்ல... நடமாடும் பவர் பேங்க்! 10080mAh பேட்டரியுடன் HONOR Power 2 வந்துவிட்டது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.