Photo Credit: Nothing
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட கேட்ஜெட் எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். செல்போன் தாண்டி மற்ற தொழில்நுட்ப தகவல்களும் உங்களை வந்து சேரும். இப்போ நாம் பார்க்க இருப்பது Nothing Phone 3 செல்போன் பற்றி தான்
Nothing Phone 2 செல்போனை தொடர்ந்து Nothing Phone 3 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது நிறுவனத்தின் முதல் AI மூலம் இயங்கும் முயற்சி என்று கூறப்படுகிறது. இது இரட்டை பின்புற கேமரா யூனிட் மற்றும் வெளிப்படையான வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
டிவிட்டரில் வெளியான இந்த செல்போனின் ஸ்கெட்ச் படி சில அம்சங்கள் எப்படி இருக்கும் என யூகிக்க முடிகிறது. Nothing Phone 2 மாடல்களின் கேமரா யூனிட்டைப் போலவே, ஒரு கிடைமட்ட மாத்திரை வடிவ அமைப்பில் இரண்டு வட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது செல்போனின் பின்புற கேமராக்களாக இருக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் முழு பின்புற வடிவமைப்பு காட்டப்படவில்லை. எனவே இந்த செல்போன் Nothing நிறுவனத்தின் Glyph வடிவமைப்பை பெறுமா என்பது தெரியவில்லை.
ஆர்கனைன் போகிமொனின் படத்தைப் பயன்படுத்தி வரவிருக்கும் Nothing செல்போனின் மற்றொரு டீசர் வெளியாகி இருக்கிறது. இது எந்த விளக்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், இது நத்திங் ஃபோன் 3க்கான டீஸராக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. நத்திங் ஃபோன் 2க்கு அடுத்தபடியாக 2025ல் இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. AI இயங்கும் தளத்தை கொண்டுவருவதற்கான முதல் படியாக இந்த செல்போன் இருக்கும் கூறப்படுகிறது.
Nothing Phone 3 செல்போன் 6.5-இன்ச் திரையைக் கொண்டிருக்கலாம் மற்றும் Snapdragon 8s Gen 3 அல்லது MediaTek Dimensity 9200+ மூலம் இயக்கப்படலாம் என தெரிகிறது. டிஸ்பிளே HDR10+ சப்போர்ட் செய்யும். ப்ரோ வேரியண்டில் 6.67 இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 மற்றும் 12ஜிபி வரை ரேம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலைகள் ரூ.45,000 இல் தொடங்கும் என்றும், ப்ரோ வேரியண்ட் ரூ.55,000க்கு மேல் இருக்கும் என்றும் ஊகிக்கப்படுகிறது.
இது 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி UFS 4.0 மெமரியுடன் வரலாம். சாதனங்களில் AI அம்சங்களை இணைக்கும் என்பதையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கூடுதலாக ஆக்சன் பட்டன் ஆப்ஷன் Nothing Phone 3 செல்போன்களில் வரும் என தெரிகிறது. 45W வேக சார்ஜிங் திறன்களால் நிரப்பப்பட்ட நீடித்த 5,000mAh பேட்டரி இருக்கிறது. கவலை இல்லாத பயன்பாட்டையும் உறுதி செய்கிறது. நத்திங் போன் 3-ல் பிராண்டின் தனித்துவமான வெளிப்படையான பின்புறம் தொடரும் என தெரியவந்துள்ளது. இப்போது நத்திங் போன் 3 தொழில்நுட்ப ஆர்வலர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புதுமையான வடிவமைப்பு மற்றும் முன்னணி தொழில்நுட்பம் குறித்த வதந்திகளுடன் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்