Nokia C5 Endi-யின் விலை 169.99 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,700). இந்த போன் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.
Nokia C5 Endi மீடியா டெக் ஹீலியோ பி 22 SoC-யால் இயக்கப்படுகிறது
எச்எம்டி குளோபல் சமீபத்தில் மூன்று புதிய போன்களை அறிமுகப்படுத்தியது - Nokia C5 Endi, Nokia C2 Tava மற்றும் Nokia C2 Tennen. Nokia C5 Endi-யின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த போனில் டிஸ்ப்ளேவின் மேல் ஒரு வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் உள்ளது. Nokia C2 Tava மற்றும் Nokia C2 Tennen ஆகியவை இரட்டை கேமராக்கள் உள்ளன. டிஸ்ப்ளேவுக்கு மேலேயும் கீழேயும் ஒரு பெசல்கள் உள்ளது. இந்த போன்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும்.
Nokia C5 Endi-யின் விலை 169.99 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.12,700). இந்த போன் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.
Nokia C2 Tava-வின் விலை 109.99 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,300). இந்த போன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.
Nokia C2 Tennen-ன் விலை 69.99 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,200). இந்த போன் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.
இந்த போன் ஆண்ட்ராய்டு 10-ல் இயங்கும். இந்த போனில் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே ஹீலியோ பி 22 சிப்செட், 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. இந்த போனின் டிரிபிள் கேமராவில் 13 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இந்த போனில் நிறுவனம் 5,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது. இதில் ஃபேஸ் அன்லாக் ஆதரவு உள்ளது.
Nokia C2 Tava மற்றும் Nokia C2 Tennen ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த இரண்டு போன்களிலும் 5.45 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஹீலியோ பி 22 சிப்செட் உள்ளது. இரண்டு போன்களும் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.
Nokia C2 Tava, Nokia C2 Tennen ஆகியவை 8 மெகாபிக்சல் முதன்மை சென்சார்களுடன் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளன. இரண்டு போன்களிலும் 3,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. Nokia C2 Tennen ஜூன் 15 ஆம் தேதி விற்பனைக்கு வரும்.
How are we staying sane during this Coronavirus lockdown? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Samsung Patent Reportedly Shows Galaxy Z Flip Design With 360-Degree Fold, Curved Outer Display
Apple May Introduce Vapour Chamber Cooling Across Foldable iPhone and Anniversary Models, Tipster Claims
Google AI Mode Now Supports More Connected Apps Including YouTube Music for Everyday Tasks