வாழைப்பழத்தை போன்ற தோற்றம் மற்றும் மஞ்சள் நிறம் கொண்ட 'பானானா ஃபோன்' அல்லது நோக்கியா 8110 4ஜி போனுக்கு தற்போது வாட்ஸ்ஆப் அப்டேட் கிடைத்துள்ளது. இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த அப்டேட்டை நோக்கியா ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ள முடியும்.
ஜியோ நிறுவனத்தின் சார்பில் வெளியான ஜியோ போன் 2 போன்று நோக்கியாவின் இந்த மாடல் போனும் 'கேஜ்' என்னும் மென்பொருள் கொண்டு இயங்குகிறது. இந்த அப்டேட் இந்தியாவில் தான் முதல் வெளியாகியுள்ளது என ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு வெளியான இந்த நோக்கியா 8110 4ஜி, போனுக்கு வாட்ஸ்அப் அப்டேட் சுமார் ஓரு ஆண்டுக்கு பிறகுதான் வெளியாகியுள்ளது.
'இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேட் முதலில் கிடைத்தது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போனில் நாங்கள் மேலும் சில புதிய அப்டேட் வரிசைகளை சேர்த்துள்ளோம்' என ஹெச்எம்டி நிறுவனத்தின் துணை தலைவர், அஜேய் மேத்தா தெரிவித்துள்ளார்.
நோக்கியா 81104ஜி பானானா ஃபோனின் விலை மற்றும் அமைப்புகள்:
ரூ.5,999-க்கு விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 81104ஜி வாழைப் பழத்தின் மஞ்சள் நிறம் மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனைக்கு வெளியானது. இந்த போனை ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளத்தின் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு சிம் கார்டுகளை கொண்ட இந்த தயாரிப்பு 2.45 இஞ்ச் திரை, கேய் மென்பொருள், குவால்கம் ஸ்னாப்டிராகன் 205 SoC மற்றும் 4ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. இந்த போனில் 2 மெகா-பிக்சல் பின்புர கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் புளூடூத் 4.1, 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் 1,500mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்