நோக்கியா 8110 4ஜி போனானது வாழைப்பழம் போன்ற வளைந்த வடிவத்துடன் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. தற்போது இந்தியாவில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற எச்.எம்.டி குளோபல் நிகழ்ச்சியில் நோக்கியாவி 8110 4ஜி ஃபீச்சர் போன் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஃபீச்சர் போன் ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2 போன்று காய் இயங்குதளத்தில் செயல்படுகிறது. இந்த போனில் ஜி-மெயில், அவுட் லுக் மற்றும் ஸ்நேக் கேம் போன்ற முக்கியம்சங்கள் உள்ளன.
நோக்கியா 8110 4ஜி போனின் இந்திய விலை ரூ.5,999க்கு விற்பனையாகிறது. வாழைப்பழ மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போனினை ஆஃப் லைன் மற்றும் நோக்கியா விற்பனையாளர்கள் மற்றும் நோக்கியாவின் ஆன்லைன் ஸ்டோரிகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இரண்டை சிம் (மைக்ரோ+நனோ) பயன்படுத்தும் வசதி கொண்டது. இது காய் இயங்குதளத்தில் செயல்படுகிறது. 2.45 இன்ச் QVGA வளைந்த டிஸ்பிளே, 1.1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப் டிராகன் 205 பிராஸசரைக் கொண்டுள்ளது. 512 எம்.பி ரேம் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டினை பயன்படுத்தும் வசதி கொண்டது. போனின் பின்புறம் பிளாஷ் உடன் கூடிய இரண்டை கேமிராக்கள் உள்ளன.
முன்பக்கம் கேமிரா இல்லை. இதில் பிற இணைப்பு வசதிகளான, ஹாட்ஸ்பாட்டுடன் 4ஜி வோல்ட், வைஃபை 802. 11 பி/ஜி/என், புளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் போன்றவை உள்ளன. 1,500 mAh பேட்டரியை பெற்றுள்ளது இதனால், 9.32 மணி நேரம் பேசலாம். இதன் பரிமாணம் 133.45*49.3*14.9 mm மற்றும் எடை 117 கிராமாகும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்