ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா 6.2!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 29 ஏப்ரல் 2020 14:29 IST
ஹைலைட்ஸ்
  • நோக்கியா 6.2 பயனர்கள் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளனர்
  • இது ஒரு நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படும்
  • நோக்கியா 6.2 ஆண்ட்ராய்டு 10 அப்டேடின் 1.5 ஜிபி அளவு

நோக்கியா 6.2 ஒரு குறிப்பிடத்தக்க செல்பி கேமரா கொண்டுள்ளது

நோக்கியா 6.2 இப்போது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெறத் தொடங்கியுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 9 உடன் கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை பெற்றது.

எச்எம்டி குளோபல் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டுக்கான ரோட்மாப்பை வெளியிட்டது. அதன்படி, இந்த அப்டேட் சரியான நேரத்தில் வெளியிடப்பட்டது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களைப் போலவே, நோக்கியா 6.2-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டும் ஒவ்வொரு கட்டமாக வெளியாகும். 

நோக்கியா 6.2 ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டின் தகவல்கள் நோக்கியா சமூக பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. இந்த அப்டேட் முதல் கட்டத்தில் வெளியிடப்படும் நாடுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. முதல் கட்டத்தில் இந்தியா சேர்க்கப்பட்டுள்ளது என்பது இந்திய பயனர்களுக்கு ஒரு நல்ல விஷயம். இந்தியா தவிர, பங்களாதேஷ், பெல்ஜியம், கம்போடியா, பின்லாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் பல நாடுகளும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளில் 10 சதவீதம் பேர் செவ்வாய்க்கிழமை Nokia 6.2 அப்டேட்டை பெறுவார்கள் என்றும் 50 சதவீதம் பேர் மே 1 வரை கிடைக்கும் என்றும் நிறுவனம் மன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும் மே 3 க்குள் புதுப்பிப்பைப் பெறும்.

இந்த அப்டேட்டின் சேஞ்ச்லாக் okia சமூக பக்கத்தில் கொடுக்கப்படவில்லை. ஆனால், அப்டேட்டை பெற்ற ட்விட்டர் பயனர் அதன் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளார். இது அப்டேட்டின் மென்பொருள் பதிப்பு V2.290 உடன் வருகிறது மற்றும் அதன் அளவு 1.5 ஜிபி ஆகும். 

நோக்கியா 6.2-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டின் அளவு 1.5 ஜிபி ஆகும்
Photo Credit: Twitter/ Kaustubh Mangalmurti

தனியுரிமை மற்றும் இருப்பிடத்திற்கான கூடுதல் கட்டுப்பாடுகளுடன் டார்க் மோட், ஸ்மார்ட் ரீப்ளே, சைகை வழிசெலுத்தல் போன்ற புதிய அம்சங்களும் இதில் அடங்கும். இது மார்ச் 2020 பாதுகாப்பு இணைப்புடன் வருகிறது.

Advertisement

உங்கள் நோக்கியா 6.2 போனில் Settings > About phone > System updates-க்கு சென்று ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை மேனுவலாக சரிபார்க்கலாம்.


Will OnePlus 8 series be able to take on iPhone SE (2020), Samsung Galaxy S20 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia, HMD Global
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி F70 புரோ 5G விலை, வெளியீட்டு தேதி மற்றும் அம்சங்கள் அறிவிப்பு
  2. சோனி WF-1000XM6 உடன் சோனி 1000X தி கலெக்‌ஷன் DSEE அல்டிமேட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  3. ஒன்பிளஸ் N6x இந்தியாவில் 7,000mAh பேட்டரி, 13-மெகாபிக்சல் பின்புற கேமராவுடன் அறிமுகம்: விலை, விவரக்குறிப்புகள்
  4. இந்தியாவில் eSIM மற்றும் பிசிக்கல் சிம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
  5. இந்தியாவில் PS5 ஸ்டாண்டர்ட் எடிஷன் விலையை சோனி ரூ. 15,000 உயர்த்தியுள்ளது
  6. ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவில் நத்திங் ஃபோன் (4a) விலை ரூ. 3,000 உயரும் என தகவல்
  7. ஆசஸ் பேட் இந்திய விலை, ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் அறிவிப்பு; ஆகஸ்ட் 6 முதல் விற்பனை தொடங்குகிறது
  8. சாம்சங்கின் 50MP கேமரா கொண்ட மடிக்கக்கூடிய ஃபோனுக்கு ₹19,000 தள்ளுபடி; சமீபத்திய சலுகையைப் பாருங்கள்
  9. AI உதவியுடன் இன்டர்வியூவில் வென்று ₹1.5 கோடி வேலை பெற்ற நபர்; தனது உத்தியைப் பகிர்ந்துள்ளார்!
  10. ஜியோ ஹோம் 2 மாத திட்டத்தில் 1 மாதம் இலவசம்: 100Mbps இன்டர்நெட், 12 OTT ஆப்ஸ்கள் இலவசம்!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.