பல்வேறு நோக்கியா ஸ்மார்ட்போன்கள் தற்போது இந்தியாவில் விலை மலிவாக கிடைக்கிறது. ஹெச்.எம்.டி குளோபல் குறிப்பிட்ட மாடல்களின் விலையை குறைத்துள்ளது. இதனால், ஆரம்ப நிலை நோக்கியா போன்களும் ரூ.1000 முதல் 1,500 வரை குறைந்துள்ளது. எந்த எந்த ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
முதலில் நோக்கியா 3.1 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வேரியன்ட்டின் விலை அதன் பழைய விலையான ரூ.11,999லிருந்து தற்போது ரூ.1000 குறைந்து ரூ.10.999 கிடைக்கிறது. 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வேரியன்ட் நோக்கியா 3.1 போனானது இந்தியாவில் மே மாதம் வெளியானது. இதனுடன், நோக்கியா 2.1 மற்றும் நோக்கியா 5.1 போன்களும் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்தது.
நோக்கியா 3.1 ஆண்ட்ராய்டு 8.0 ஒரியோவில் இயங்குகிறது. ஸ்போர்ட்ஸ் 5.2 இன்ச்+எச்.டி (720X1440 பிக்ஸெல்ஸ்) டிஸ்பிளேயுடன் 18:9 அக்ஸப்ட் ரேஸியோ மற்றும் கார்னரிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த மொபைல், ஆக்டோ-கோர் மீடியாடெக் MT6750 கொண்டுள்ளது.
இதையடுத்து, நோக்கியா 5.1 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வேரியன்ட்டின் விலை பழைய விலையை விட ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.10,999 கிடைக்கிறது.
நோக்கியா 5.1 ஸ்போர்ட்ஸ் 5.5 இன்ச் புல்-எச்.டி+ (1080X2160 பிக்ஸெல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேயுடன் 18:9 அக்ஸப்ட் ரேஸியோ மற்றும் கார்னரிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த மொபைல், ஆக்டோ-கோர் மீடியாடெக் MT6755S கொண்டுள்ளது.
அடுத்து, நோக்கியா 6.1, 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியன்ட்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.1,500 மற்றும் ரூ.1,000 விலை குறைக்கப்பட்டு கிடைக்கிறது. 3ஜிபி நோக்கியா 6.1 போனானது ரூ.13,499க்கும் 4ஜிபி நோக்கியா 6.1 போனானது அதன் புதிய விலையான ரூ.16,499க்கும் கிடைக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வெளிவந்த நோக்கியா 6.1 மற்றும் நோக்கியா 6 3ஜிபி ரேம் விலையானது ரூ.16,999ல் இருந்து தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து ஒரு மாதம் கழித்து 4 ஜிபி ரேம் வேரியன்ட் வெளியானது அதன் விலை. ரூ.18,999 ஆக இருந்தது. தற்போது இந்த இரண்டு வேரியன்ட்களின் விலையும் ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் கொண்ட நோக்கியா 6.1 போனானது ஆண்ட்ராய்டு ஒன் புரோகிராம் கொண்டு ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோவில் இயங்குகிறது. இது ஸ்போர்ட்ஸ் 5.5 இன்ச் புல் எச்.டி (1080X1920 பிக்ஸெல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேயுடன் 18:9 அக்ஸப்ட் ரேஸியோ மற்றும் ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்னாப்டிராகன் 630 கொண்டுள்ளது. இதன் நினைவகத்தை SD கார்டு கொண்டு 128ஜிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.
கடைசியாக நோக்கியா 8 சிரோகோ போனானது மிகப்பெரிய விலை குறைப்பாக ரூ.13,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் வெளியான போது ரூ.49,999 கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ.36,999 ஆகும்.
நோக்கியா 8 சிரோகா போனானது ஆண்ட்ராய்டு ஒன் கொண்டு ஆண்ட்ராய்டு ஒரியோ 8.1 மூலம் இயங்குகிறது. 5.5 இன்ச் புல் எச்.டி (1440X2560 பிக்ஸெல்ஸ்) எல்இடி டிஸ்பிளேயுடன் 16:9 அக்ஸப்ட் ரேஸியோ மற்றும் 3டி கார்னரிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டுள்ளது. இது ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்னாப்டிராகன் 835 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்