நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த ஆண்ட்ராய்டு அப்டேட் விரைவில் எல்லா போன்களையும் சென்றடையும் என எதிர்பார்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அறிமுகமான நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மென்பொருளை கொண்டு வெளியானது. அந்த போன்களுக்கு இதுவரை ஆண்ட்ராய்டு 8.1 அப்டேட் கிடைக்காத நிலையில் தற்போது நேரடியாக ஆண்ட்ராய்டு 9 பைய் அப்டேட் கிடைக்கிறது.
இந்த மார்ச் மாதம் ஹெச்எம்டி நிறுவனம் சார்பில் நோக்கியா 5.1 போனுக்கு ஆண்ட்ராய்டு 9 அப்டேட் மட்டுமின்றி நோக்கியா 8.1 மற்றும் நோக்கியா 5.1 பிளஸ் அப்டேட்களும் வெளியாகியுள்ளன.
'நோக்கியா 5.1 போனுக்கான அப்டேட் தானாகவே எல்லா போன்களையும் சென்றடையும்' என ஹெச்எம்டி நிறுவனம் சார்பாக ஜூஹோ சார்விகாஸ் தெரிவிதார். தானாகவே அப்டேட் ஆகும் நிலையில் வேண்டுமென்றால் போனில் தாமாகவும் அப்டேட் செய்து கொள்ள முடியும்.
இந்த புதிய அப்டேட் மூலம் போனில் புதிய வழிகாட்டும் கருவி, மேம்படுத்தப்பட்ட மெனு, அடாப்டிவ் பேட்டரி மற்றும் ப்ரையிட்னெஸ் போன்ற பல வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
நோக்கியா 8.1 மார்ச் அப்டேட்:
ஹெச்எம்டி குளோபல் தனது தயாரிப்பான நோக்கியா 8.1 (ரூ.26,770) ஸ்மார்ட்போனுக்கு இந்தியா மற்றும் போலாந்து நாடுகளில் அப்டேட்களை வழங்கி வருகிறது.126 எம்பி அளவு கொண்ட இந்த ஆண்ட்ராய்டு அப்டேட் ஆண்ட்ராய்டு செக்கியூரிட்டி அப்டேட்டை கொண்டு வருகிறது.
நோக்கியா 5.1 பிளஸ் மார்ச் அப்டேட்:
நோக்கியா 8.1 அப்டேட் போல நோக்கியா 5.1 பிளஸ் அப்டேட்டையும் ஹெச்எம்டி நிறுவனம் இந்த மார்ச் மாதத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் வெளியாகியுள்ள இந்த அப்டேட் 84.6 எம்பி அளவுடையது. இந்த அப்டேட்டையும் நம்மால் காத்திருக்காமல் மேனுவலாக பெற முடியும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்