அதிரடி விலைக் குறைப்பில் Nokia 2.3...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 15 பிப்ரவரி 2020 10:00 IST
ஹைலைட்ஸ்
  • இந்த போன், நோக்கியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக ரூ.7,199-க்கு கிடைக்கிறது
  • அமேசான் இந்த போனை சற்றே குறைந்த விலையில் ரூ.7,165-க்கு விற்பனை செய்கிறது
  • Nokia 2.3, quad-core MediaTek Helio A22 SoC-யால் இயக்கப்படுகிறது

Nokia 2.3 கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் ரூ.8,199-க்கு அறிமுகமானது

Nokia 2.3 கடந்த ஆண்டு டிசம்பரில் மீண்டும் அறிமுகமானது, விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது, இதன் ஒரே வேரியண்டின் ரூ.8,199 ஆகும். நோக்கியா தனது நுழைவு நிலை ஆண்ட்ராய்டு போனின் விலையை, இந்தியாவில் ரூ.1,000 குறைத்துள்ளது. தற்போது இந்த போனின் விலை ரூ.7,199 ஆகும்.

Nokia 2.3-யின் விலைக் குறைப்பு இப்போது நாட்டில் நேரலையில் உள்ளது, மேலும் இது அதிகாரப்பூர்வ Nokia online store-ல் இருந்து ரூ.7,199-க்கு வாங்காலாம். இந்த போன் சற்றே குறைந்த விலையில், Amazon-ல் இருந்து ரூ.7,165-க்கு கிடைக்கிறது. Nokia 2.3,Cyan Green, Sand மற்றும் Charcoal கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம்.


Nokia 2.3-யின் விவரக்குறிப்புகள்: 

டூயல்-சிம் (நானோ) Nokia 2.3, Android Pie-ல் இயங்குகிறது. இது விரைவில் Android 10 அப்டேட்டைப் பெறும். இது waterdrop notch மற்றும் 19:9 aspect ratio உடன் 6.2-inch HD+ (720x1520 pixels) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 2GB RAM உடன் இணைக்கப்பட்டு quad-core MediaTek Helio A22 SoC-யால் இயக்கப்படுகிறது. 

Nokia's நுழைவு நிலை போன், டூயல்  ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 2-மெகாபிக்சல் depth சென்சார் உதவியோடு, f/2.2 aperture உடன் 13-மெகாபிக்சல் முதன்மை ஸ்னாப்பர் அடங்கும். செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்கு f/2.4 aperture உடன் 5-மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதில் 32GB ஆன்போர்டு ஸ்டோரேஜ் உள்ளது. இதனை microSD card வழியாக (400GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.

இந்த நோக்கியா போன் பிரத்யேக Google Assistant பொத்தானுடன் வருகிறது. மேலும், 3D nano texture உடன் polymer body-ஐக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v5.0, GPS/ A-GPS, Micro-USB (v2.0) மற்றும் 3.5mm headphone jack ஆகியவை அடங்கும். Nokia 2.3, 5W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: , HMD Global
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.