Nokia 110 (2019)-ல் புகைப்படங்களை எடுக்க built-in rear கேமரா பயன்படுகிறது. Nokia 110 (2019)-ஐ ஒரு பொழுதுபோக்கு சாதனமாக நிலைநிறுத்துகிறது.
Nokia 110 (2019)-ல் Snake கேம் pre-installed செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் Nokia 110 (2019)-ஐ நோக்கியா மொபைல் பிராண்ட் உரிமதாரர் HMD குளோபல் நிறுவனத்தால் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட Nokia 105-யிலிருந்து, புதிய ஸ்மார்ட்போன் ஒரு படி மேலே உள்ளது. Nokia 110 (2019)-ஐ ஒரு பொழுதுபோக்கு சாதனமாக நிலைநிறுத்துகிறது.
இந்தியாவில் Nokia 110 (2019)-ன் விலை:
இந்தியாவில் Nokia 110 (2019) விலை ரூ. 1,599-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Black, Ocean Blue மற்றும் Pink நிறத்தில் விற்பனை செய்யப்படும். அக்டோபர் 18 முதல் சில்லறை கடைகளிலும், அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் Nokia 110 கிடைக்கும். நினைவுகூர, கடந்த மாதம் IFA 2019-ல் இந்த போன் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விவரக்குறிப்புகள்:
புதிய Nokia 110 (2019), 1.77-inch QQVGA டிஸ்பிளே (120x160 pixels) கொண்டுள்ளது. இது ஒரு SPRD 6531E பிராசசர், 4MB ரேம் மற்றும் 4MB ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. இந்த போன் Nokia சீரிஸ் 30+ மென்பொருளால் இயக்குகிறது. மேலும், Micro-USB 2.0 port-ஐக் கொண்டுள்ளது. dual-SIM சாதனமான இது இரண்டு Mini-SIM slots-ஐக் கொண்டுள்ளது. இதில் microSD card slot உள்ளது. Nokia 110 (2019) 32 ஜிபி வரை கார்டுகளை ஏற்றுக்கொள்கிறது.
Nokia 110 (2019)-ஐ இயக்குவதற்கான 800mAh பேட்டரியை, HMD Global தேர்வுசெய்தது. மேலும், 18.5 நாட்கள் standby time கோருகிறது. இந்த தொலைபேசி 14 மணிநேர talk-time, 27 மணிநேர தொடர்ச்சியான MP3 பிளேபேக் மற்றும் 18 மணிநேர FM ரேடியோ பிளேபேக்கை வழங்குவதாகக் கூறுகிறது. Nokia 110 (2019)-ல் புகைப்படங்களை எடுக்க built-in rear கேமரா பயன்படுகிறது. மேலே LED torchlight-ஐக் கொண்டுள்ளது.
Nokia 110 (2019) பிரபலமான Snake கேம் pre-installed உடன் வருகிறது. மேலும் Ninja Up, Air Strike, Football Cup மற்றும் Doodle Jump ஆகிய கேம்களைக் கொண்டுள்ளது. இந்த போன் 115.15 x 49.85 x 14.3mm அளவீடு செய்யும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket