இன்று முதல் துவங்கும் 'உலக மொபையில் காங்கிரஸ்' நிகழ்ச்சியில் பல முக்கிய தொழிநுட்பச் சாதனங்கள் மற்றும் மொபைல்கள் அறிமுகம் செய்யபட உள்ளன.
நேற்று பார்சிலோனாவில் நடைபெற்ற அறிமுக விழாவில் ஹெச்எம்டி குளோபல் (நோக்கியா) நிறுவனம் நோக்கியா 1 பிளஸ் மற்றும் நோக்கியா 210 ஆகிய இரண்டு போன்களையும் அறிமுகம் செய்தது. இந்தப் புதிய நோக்கியா 1 பிளஸ் ஸ்மார்ட்போன், ஆண்டிராய்டு 9.0 பைய் (Pie) மென்பொருள் மற்றும் குவாட்-கோர் மீடியா டெக் பிராசஸரால் இயங்குகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஃப்லோரியான் சிய்ஷி இந்த போனைகளை அறிமுகம் செய்து பேசியபோது, நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 8110 போன்களுக்கு உலகம் முழுவதும் 10 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், அதே சாதனையை இந்த போன்களும் செய்யும் எனவும் பெருமிதத்துடன் கூறினார்.
ஆண்டிராய்டு 9.0 பைய் (கோ வகை) மென்பொருளை கொண்ட நோக்கியா 1 ஸ்மார்ட்போன், 5.45 இஞ்ச் உள்ள FWVGA IPS திரையைக் கொண்டு வெளியானது.
மேலும் அந்த போன், குவாட்-கோர் மீடியா டெக் பிராசஸரை சிறப்பு அம்சமாக கொண்டிருந்தது. 1ஜிபி ரேம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 8 மெகா பிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 5 மெகா பிக்சல் சென்சாருடன் வெளியானது.
மேலும், 8ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. சேமிப்பு வசதியை விரிவாக்கம் செய்யக்கூடிய வசதியுடைய மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியும் இந்த போனில் உண்டு. பேட்டரி பவரை பொறுத்தவரை 2,500 mAh வசதியுடை இந்த ஸ்மார்ட்போன், விற்பனைக்கு வெளியாகும் போது இளைஞர்களை கவரும் முயர்சியில் பல நிறங்களில் வரும்.
நோக்கியா 210 போன், எஸ்30+ மென்பொருளில் இயங்குகிறது. காம்பேக்ட் போன் வகையான இந்த நோக்கியா 210, 2.4 இஞ்ச் திரை கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் விஜிஏ கேமாரவுள்ள நிலையில், 1,020mAh பேட்டரி பவருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஃப்எம் மற்றும் ஓபேரா மினி பிரவுசர் போன்ற ஆப்களுடன் இந்த போன் வெளியாகவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ரிங்டோன்களை பதிவிறக்கும் செய்யும் வகையில் ஒரு ஆப்பும் இந்த போனில் பொறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகமெங்கும் பிரபலமான 'பாம்பு கேம்' இந்த போனில் வெளியாகும் என்ற தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.
நோக்கியா 1 பிளஸ் போன் மார்கெட் விலையாக (ரூ.7,000) விற்பனை செய்யப்படலாம். இந்த போன் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் 210 போன் வெளியாகிறது. அதே சமயத்தில் நோக்கியா 210 (ரூ.2,500) விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த போனும் அடுத்த மாதம் வெளியாகும் நிலையில் சிவப்பு, கறுப்பு மற்றும் சாம்பல் நிறங்களில் இந்த போன்கள் வெளியாகிறது என்பது கூடுதல் தகவல்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்