Motorola, Swarovski நிறுவனத்துடன் இணைந்து Motorola Razr 60 மற்றும் Moto Buds Loop-ல் வைரங்கள் பதிக்கப்பட்ட 'Brilliant Collection' எனும் புதிய கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது
Photo Credit: Motorola
மோட்டோரோலா பட்ஸ் லூப் முன்பு ஸ்வரோவ்ஸ்கி படிகங்களுடன் பிரெஞ்சு ஓக் பூச்சுடன் வந்தது
உலகத்துல ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள்ல புதுமைகளை அறிமுகப்படுத்துறதுல Motorola எப்பவும் முன்னணியிலதான் இருக்கும். அந்த வகையில, இப்போ அவங்க ஒரு புது கலெக்ஷனை வெளியிட்டு, ஸ்மார்ட்போன் உலகத்துல ஒரு பெரிய ட்ரெண்டை உருவாக்கிருக்காங்க. Swarovski அப்படின்னு உலகப் புகழ் பெற்ற க்ரிஸ்டல் நிறுவனத்தோட கை கோர்த்து, ஒரு பிரம்மாண்டமான Brilliant Collection-ஐ அறிமுகப்படுத்திருக்காங்க. இந்த கலெக்ஷன்ல, Motorola-வோட புது மடிக்கக்கூடிய போன் ஆன Motorola Razr 60 மற்றும் Moto Buds Loop இயர்பட்ஸ் இருக்கு. வைரங்கள் பதிக்கப்பட்ட இந்த போன் மற்றும் இயர்பட்ஸ் பத்தின தகவல்களை நாம இப்போ விரிவா பார்க்கலாம். இந்த Brilliant Collection-க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்னு பார்த்தா, இந்த சாதனங்கள்ல Swarovski க்ரிஸ்டல்கள் பதிக்கப்பட்டிருக்கிறதுதான்.
அதாவது, மடிக்கக்கூடிய போன் ஆன Motorola Razr 60-ல, அதோட வெளியுறையில (outer shell) புதிதாக கருப்பு நிற வீகன் லெதர் (vegan leather) டிசைன் கொடுத்திருக்காங்க. அதுல, Motorola-வோட 'M' லோகோ வடிவத்துல Swarovski க்ரிஸ்டல்கள் ஒட்டப்பட்டிருக்கு. போன் பார்க்கவே ரொம்பவே பிரீமியம் லுக்கோட இருக்கு. இது மட்டும் இல்லாம, போனோட மூடி ஸ்கிரீன்ல "Starry Night" அப்படின்னு ஒரு புது அனிமேஷன் தீம் கொடுத்திருக்காங்க. நோட்டிபிகேஷன் வரும்போது, இந்த ஸ்கிரீன் மின்னி, புதுசா ஒரு அனுபவத்தை கொடுக்கும். போனோட ஹிஞ்ச்-லயும் "Brilliant Platinum" அப்படின்னு ஒரு புது ஃபினிஷிங்கைக் கொடுத்திருக்காங்க.
இதே மாதிரி, Moto Buds Loop இயர்பட்ஸ்-ம் இந்த Brilliant Collection-ல ஒரு அங்கமா வந்திருக்கு. இந்த இயர்பட்ஸ் மற்றும் அதோட சார்ஜிங் கேஸ்-ம், புது கருப்பு நிறத்துல, அதுலையும் Swarovski க்ரிஸ்டல்கள் பதிக்கப்பட்டிருக்கு. இது இசை பிரியர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். இந்த புதிய Brilliant Collection இப்போதைக்கு ஆகஸ்ட் 8-ம் தேதியிலிருந்து சைனாவுல மட்டும்தான் விற்பனைக்கு கிடைக்குது. இந்தியாவிலோ அல்லது மற்ற உலக நாடுகளிலோ எப்போ லான்ச் ஆகும்னு எந்த தகவலும் இன்னும் வெளியாகல.
இந்த போனோட சிறப்பம்சங்களைப் பத்தி பேசணும்னா, இதுல Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர் இருக்கு. டிஸ்ப்ளேன்னு பார்த்தா, இதுல 6.9-இன்ச் pOLED உள் டிஸ்ப்ளே (144Hz ரிஃப்ரெஷ் ரேட்டோட) மற்றும் 3.6-இன்ச் pOLED கவர் டிஸ்ப்ளே இருக்கு. கேமரா விஷயத்துல, பின்னாடி 50MP பிரைமரி கேமராவும், 13MP அல்ட்ராவைடு லென்ஸும் இருக்கு. முன்னாடி செல்ஃபி எடுக்கிறதுக்கு 32MP கேமரா கொடுத்திருக்காங்க. பேட்டரியும் 4,000mAh பேட்டரி, 30W வயர்டு மற்றும் 8W வயர்லெஸ் சார்ஜிங் வசதியோட இருக்கு.
இந்த Razr 60 Brilliant Collection-னோட விலை சைனாவுல தோராயமா ரூ. 69,100-க்கு விற்பனையாகுது. Moto Buds Loop-ஓட விலை தோராயமா ரூ. 9,200-க்கு விற்பனையாகுது. இந்தியால லான்ச் ஆகும்போ, விலையில சில மாற்றங்கள் இருக்கலாம். மொத்தத்துல, இந்த புது கலெக்ஷன், தொழில்நுட்பத்தையும் பிரீமியத்தையும் இணைச்ச ஒரு புது முயற்சி.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Hogwarts Legacy Is Now Available for Free on PC via Epic Games Store: How to Redeem
iOS 26 Code Reportedly Reveals When Apple's Revamped Siri Could Launch Alongside Compatible HomePod