Motorola Razr 50D அடுத்த வாரம் ஜப்பானிய சந்தையில் வர உள்ளது
Photo Credit: Motorola
மோட்டோரோலா Razr 50D வெள்ளை மார்பிள் ஃபினிஷில் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Motorola Razr 50D செல்போன் பற்றி தான்.
Motorola Razr 50D அடுத்த வாரம் ஜப்பானிய சந்தையில் வர உள்ளது. புதிய மடிக்கக்கூடிய செல்போனாக இது இருக்கும். ஜப்பானிய மொபைல் ஆபரேட்டரான என்டிடி டோகோமோவின் இணையதளத்தில் அறிமுகத்திற்கான மைக்ரோசைட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெளியீட்டு தேதி, விலை விவரங்கள் மற்றும் அதில் உள்ள அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. Motorola Razr 50D ஆனது இந்தியாவில் கிடைக்கும் வழக்கமான Razr 50 போன்ற வடிவமைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 6.9 இன்ச் இன்னர் டிஸ்ப்ளே மற்றும் 3.6 இன்ச் கவர் திரையுடன் க்லாம்ஷெல் மாடலில் மடிக்கக்கூடிய செல்போனாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஜப்பானின் என்டிடி டோகோமோவின் இணையதளத்தில், அறிமுக தேதி, விலை, முன்கூட்டிய ஆர்டர் விவரங்கள் மற்றும் மோட்டோரோலா ரேஸ்ர் 50டியின் சில அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் ஆரம்பவிலை 65,000 ஆயிரம். டிசம்பர் 19 அன்று வெளியிடப்படும். மாதத் தவணையாக ரூ. 1,500 செலுத்தி வாங்கலாம். வாடிக்கையாளர்கள் டிசம்பர் 17 முதல் இதை முன்கூட்டியே வாங்க முடியும்.
Motorola Razr 50D ஆனது, பட்டியலின் படி, வெள்ளை மார்பிள் ஃபினிஷில் கிடைக்கும். clamshell-foldable ஆனது வட்டமான பக்கங்களைக் கொண்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது Razr 50 ஐப் போலவே உள்ளது. இது வழக்கமான Motorola Razr 50 மாடலின் டோகோமோ பிரத்தியேக மாடலாகத் தெரிகிறது. மோட்டோரோலா Razr 50 இந்தியாவில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் 64,999 ரூபாய் விலையில் அறிமுகம் ஆனது.
இதில் நானோ+eSIM என டூயல் சிம் வசதி இருக்கிறது. மோட்டோரோலா ரேசர் 50டி கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் மற்றும் 3.6 இன்ச் வெளிப்புறத் திரையுடன் கூடிய 6.9-இன்ச் ஃபுல்-எச்டி+ பொலிட் இன்னர் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 50 மெகாபிக்சல் முதன்மை பின்புற கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமராவை கொண்டுள்ளது.
Motorola Razr 50D ஆனது 4,000mAh பேட்டரி, 8GB RAM + 256GB மெமரி ஆப்ஷனுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இது IPX8-மதிப்பிடப்பட்ட நீர்-விரட்டும் கட்டமைப்பு மற்றும் Dolby Atmos ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. 187 கிராம் எடை கொண்டது.
இதுவே இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா Razr 50 மாடலில் 6.9 இன்ச் இன்டர்னல் ஸ்கிரீன் மற்றும் 3.63 இன்ச் கவர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 7300X SoC மூலம் இயங்குகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications