Razr 2019 மடிக்கக்கூடிய தொலைபேசி ஐரோப்பாவில் டிசம்பர் 2019 அல்லது ஜனவரி 2020-ல் EUR 1,500 (சுமார் ரூ. 1,19,000) விலையுடன் அறிமுகமாகும்
Photo Credit: Yanko Design
Motorola Razr 2019 மடிக்கக்கூடிய போன் chin உடன் வர வாய்ப்புள்ளது
மடிக்கக்கூடிய போனாக Motorola Razr-ன் மறுபிரவேசம் இந்த ஆண்டின் தொடக்கத்தில், முதல் வதந்திகள் வெளிவந்ததிலிருந்து நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதன் வருகையைப் பற்றிய உறுதிப்படுத்தல் விரைவில் வெளிவந்தது. இப்போது, லெனோவாவுக்குச் சொந்தமான நிறுவனம் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சிக்கு அழைப்புகளை அனுப்புகிறது என்று கூறப்படுகிறது. அங்கு Razr மடிக்கக்கூடிய போனை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Razr 2019 என்று அழைக்கப்படும் இந்த கைபேசி, Huawei Mate X மற்றும் Samsung Galaxy Fold-க்கு எதிராக அதன் மடிப்பு வடிவமைப்பில் போட்டியிடும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், Motorola VP அதன் விவரக்குறிப்புகள் மற்றும் பிரீமியம் தோற்றமுள்ள clamshell போன்களை வழங்குவதற்காக ஒரு காலத்தில் அறியப்பட்ட iconic Razr பிராண்டுடன் அதன் தொடர்புகளையும் குறிப்பிடாமல் மடிக்கக்கூடிய தொலைபேசியை அறிமுகப்படுத்தும் திட்டங்களை உறுதிப்படுத்தியது.
மோட்டோரோலாவால் பரப்பப்பட்ட ஊடக அழைப்பிதழில் உள்ள GIF, தொலைபேசியை மடித்து திறக்குமாறு பரிந்துரைக்கிறது என்று CNet தெரிவித்துள்ளது.
![]()
மடிக்கக்கூடிய போன்களில் ஆர்வம் காட்டிய முதல் சில நிறுவனங்களில் மோட்டோரோலா குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பிப்ரவரியில் ஒரு ஊடக நேர்காணலில் மடிக்கக்கூடிய போனின் திட்டங்களை Motorola VP உறுதிப்படுத்தியது.
கூடுதலாக, கடந்த காலத்தில் சாம்சங் மற்றும் ஹவாய் தங்களது மடிக்கக்கூடிய தொலைபேசிகளை உருவாக்கும் போது வேறுபட்ட அணுகுமுறையை மோட்டோரோலா எடுக்கும் என்றும், இரண்டு முறை மடிக்கக்கூடிய single flexible டிஸ்பிளே உடன் dual-hinge வடிவமைப்போடு வரும் என்றும் நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம், WIPO தளத்தில் ஒரு பட்டியல் வெளிவந்தது. இது புதிய மடிக்கக்கூடிய தொலைபேசியின் வடிவமைப்பைக் குறிப்பதோடு, iconic Motorola Razr hinge மற்றும் chin ஆகியவற்றை உள்ளடக்கியது.
Razr 2019 மடிக்கக்கூடிய தொலைபேசி ஐரோப்பாவில் டிசம்பர் 2019 அல்லது ஜனவரி 2020-ல் EUR 1,500 (சுமார் ரூ. 1,19,000) விலையுடன் அறிமுகமாகும் என்று ஆகஸ்ட் மாதம் ஒரு அறிக்கை கூறியது. இது Yanko டிசைனின் Sarang Sheth உருவாக்கிய ரெண்டர்களுக்கு ஒத்ததாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. முந்தைய Razr தொலைபேசிகளைப் போலவே உருவாக்க, முன்பக்கத்தில் secondary டிஸ்பிளே இருப்பதை ரெண்டர்கள் பரிந்துரைத்தன.
Motorola Razr 2019, 6GB RAM மற்றும் 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 710 SoC உடன் வருவதாக வதந்தி பரவி வருகிறது. 6.2-inch (876x2142 pixels) folding டிஸ்பிளேவுடன் 600x800 pixels resolution கொண்ட secondary டிஸ்பிளேவுடன் இணைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications