ஹோல்-பன்ச் திரையுடன் மற்றொரு ஸ்மார்ட்போன், 'மோட்டோரோலா P50' அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
ஹோல்-பன்ச் திரையுடன் மற்றொரு ஸ்மார்ட்போன், 'மோட்டோரோலா P50' அறிமுகம்!

'மோட்டோரோலா P50' ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 15 அன்றே துவங்கவுள்ளது.

ஹைலைட்ஸ்
 • 'மோட்டோரோலா P50' ஹோல்-பன்ச் செல்பி கேமராவை கொண்டுள்ளது
 • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது
 • இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 20 அன்று விற்பனைக்கு வரவுள்ளது

வியாழக்கிழமையன்று சீனாவில் இந்த 'மோட்டோரோலா P50' ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 20 அன்று விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமாகி விற்பனைக்கு வந்த 'மோட்டோரோலா ஒன்விஷன்' ஸ்மார்ட்போனின் மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷன் போலவே சிறப்பம்சங்களை கொண்ட இந்த 'மோட்டோரோலா P50' ஸ்மார்ட்போன், சீன வெளியிட்டில் ஆண்ட்ராய்ட் ஒன் மற்றும் கூகுள் சேவைகள் இன்றி வெளியாகியுள்ளது. 

21:9 விகிதத்திலான திரை, 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா,சாம்சங் ஆக்டா-கோர் எக்சினோஸ் 9609 எஸ் ஓ சி ப்ராசஸர், 3,500mAh பேட்டரி, ஹோல்-பன்ச் திரையுடன் 25 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமரா பொன்ற பல சிறப்பம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

'மோட்டோரோலா P50': விலை!

6GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவு என ஒரே வகையில் சீனாவில் வெளியாகியுள்ளது இந்த 'மோட்டோரோலா P50' ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் விலை 2,499 யுவான்கள் (25,000 ரூபாய்). வெண்கலம் (Bronze Gradient) மற்றும் சபையர் (Sapphire Gradient) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

முன்பு குறிப்பிடப்ட்டது போல, இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 20 அன்று விற்பனைக்கு வரவுள்ளது. இன்னிலை, இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 15 அன்றே துவங்கவுள்ளது. 

'மோட்டோரோலா P50': சிறப்பம்சங்கள்!

இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் 9 பை (Android 9 Pie) அமைப்பு கொண்டு செயல்படுகிறது. சாம்சங் ஆக்டா-கோர் எக்சினோஸ் 9609 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 2.2GHz வேகத்தில் செயல்படும்.

6.34 இன்ச் அளவிலான இதன் திரை FHD+ (1080x2520 பிக்சல்கள்) திரையாகவே அறிமுகமாகியுள்ளது. மேலும் 21:9 திரை விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ளது. முக்கியமாக, இதன் திரை 'ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே' என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது இந்த 'மோட்டோரோலா P50', 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான மற்றோரு கேமரா. செல்பிக்களுக்காக, இதன் முன்புறத்தில் 25 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

3,500mAh பேட்டரி அளவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் அதிவேக சார்ஜ் வசதியையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G LTE, வை-பை, ப்ளூடூத் 5.0, பின்புற ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டோல்பி ஆடியோ என மற்ற வசதிகளை கொண்டுள்ளது.

Display 6.34-inch
Processor octa-core
Front Camera 25-megapixel
Rear Camera 48-megapixel + 5-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 3500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2520 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

Advertisement

#சமீபத்திய செய்திகள்
 1. Lenovo Yoga Slim 7i லேப்டாப் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?
 2. புதிதாக அறிமுகமாகவுள்ள Nokia 2.4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் கசிந்தது!
 3. BSNL: 399 ரூபாய்க்கு புதிய பிளான் அறிமுகம்! ஏற்கனவே உள்ள இரு பிளான்கள் இன்று முதல் ரத்து!!
 4. டிக்டாக்கில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் உடன் பேச்சுவார்த்தை!
 5. விதிகளை மீறி பயனர்களின் தகவல்களைத் திரட்டிய டிக்டாக்?
 6. Realme 6i ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
 7. Realme C12, Realme C15 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்! என்ன எதிர்பார்க்கலாம்?
 8. Redmi K30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!
 9. Redmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்!
 10. Google People Cards அறிமுகம்: இனி உங்கள் பெயரைத் தேடினாலே கூகுளில் கிடைத்துவிடுவீர்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.
Listen to the latest songs, only on JioSaavn.com