ஜூன் 27 அன்று விற்பனைக்கு வரவுள்ள இந்த 'ஒன் விஷன்' ஸ்மார்ட்போன் இந்தியாவில் 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.
இரு வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ள 'ஒன் விஷன்' ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா ‘ஒன் விஷன்' இறுதியாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒரு மாத காலத்திற்கு பிறகு, இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, மோட்டோரோலா நிறுவனம். ஒரு மாதம் முன்பே இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. வியாழக்கிழமையான இன்று புது டெல்லியில் நிகழ்வு ஒன்றில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது மோட்டோரோலா நிறுவனம். ஆண்ட்ராய்ட் ஒன்னை மையப்படுத்தி மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஹோல்-பன்ச் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. மேலும் 21:9 விகிதத்திலான திரை, 48 மெகாபிக்சல் கேமரா போன்ற பல சிறப்பம்சங்களை கொண்ட இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்' இந்தியாவில் என்ன விலைக்கு விற்பனையாகும், எப்போது விற்பனையாகும், இதன் முழு சிறப்பம்சங்கள் என அனைத்தும் இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
மோட்டோரோலா ‘ஒன் விஷன்': என்ன விலை, எங்கு விற்பனையாகும், எப்போது விற்பனையாகும்?
இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்' ஸ்மார்ட்போன், ஒரே ஒரு வகையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது இந்த வகை. இந்த 'ஒன் விஷன்' ஸ்மார்ட்போன் இந்தியாவில் 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. வெண்கலம் (Bronze Gradient) மற்றும் சபையர் (Sapphire Gradient) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 27 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில் நடக்கவுள்ளது.
மோட்டோரோலா ‘ஒன் விஷன்': என்ன சிறப்பம்சங்களை கொண்டுள்ளது?
இரண்டு நானோ சிம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்ட் 9 பை (Android 9 Pie) அமைப்பு கொண்டு செயல்படுகிறது. சாம்சங் ஆக்டா-கோர் எக்சினோஸ் 9609 எஸ் ஓ சி ப்ராசஸரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 2.2GHz வேகத்தில் செயல்படும்.
6.3 இன்ச் அளவிலான இதன் திரை FHD+ (1080x2520 பிக்சல்கள்) திரையாகவே அறிமுகமாகியுள்ளது. மேலும் 21:9 திரை விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு என அட்டகாசமான திரை அம்சங்களை கொண்டுள்ளது. முக்கியமாக, இதன் திரை 'ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே' என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன், ஃபேஸ் அன்லாக் வசதியையும் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இரண்டு பின்புற கேமராக்கள் கொண்டுள்ளது இந்த 'ஒன் விஷன்', 48 மெகாபிக்சல் அளவிலான முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் அளவிலான மற்றோரு கேமரா. செல்பிக்களுக்காக, இதன் முன்புறத்தில் 25 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
3,500mAh பேட்டரி அளவுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் 15W டர்போபவர் சார்ஜர் வசதியையும் கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 4G LTE, வை-பை, ப்ளூடூத் 5.0, பின்புற ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், டோல்பி ஆடியோ என மற்ற வசதிகளை கொண்டுள்ளது.180 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 160.1x71.2x8.7mm என்ற அளவை கொண்டு வெளியாகவுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
ces_story_below_text
விளம்பரம்
விளம்பரம்
The Raja Saab OTT Release Reportedly Leaked Online: What You Need to Know Prabhas Starrer Movie
Joto Kando Kolkatatei Now Streaming on Zee 5: Everything You Need to Know About This Bengali Mystery Film Online
Fire Force Season 3 Part 2 Now Streaming on Crunchyroll: Know Everything About This Season Finale