Photo Credit: WinFuture
மோட்டோரோலா நிறுவனம், தனது ஒன் விஷன் (One Vision) ஸ்மார்ட் போன் உட்பட பல சாதனங்களை வரும் மே 15 ஆம் தேதி, பிரசேலின் சாவ் பவுலாவில் வெளியிட திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ஒன் விஷன் போன் குறித்த விலை மற்றும் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழு விபரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இந்த புதிய லீக்கின்படி, மோட்டோ ஒன் விஷன் போனில், ஹோல்-ப்ன்ச் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, எக்சினாஸ் 9609 ப்ராசஸர், 128ஜிபி சேமிப்பு வசதி, 4ஜிபி ரேம் உள்ளிட்ட வசதிகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போனின் பின்புறத்தில் ரியல் ஃபிங்கர் பிரின்ட் சென்சார், டூயல் கேமரா செட்-அப் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கும் எனப்படுகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த வின்ஃப்யூச்சர் (WinFuture) தளம்தான், மோட்டோ ஒன் விஷன் குறித்த தகவல்கள் மற்றும் போட்டோவை லீக் செய்துள்ளது. இந்த லீக்கின்படி, சிறிய சின் போன்ற அமைப்புடன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளேவை ஒன் விஷன் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. டூயல் கேமரா செட்-அப் செங்குத்தாக பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா லோகோவே, ஃபிங்கர் பிரின்ட் சென்சாராக பயன்படும். வால்யூம் மற்றும் பவர் பட்டன் போனின் வலது விளிம்பில் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்பீக்கர், போனின் அடி விளிம்பில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் விலை சுமார் 23,400 ரூபாய் இருக்கும் என வின்ஃப்யூச்சர் கூறுகிறது. மே 16 முதல் இந்த போன் சந்தைகளில் கிடைக்குமாம். நீலம் மற்றும் ப்ரான்ஸ் வண்ணங்களில் இந்த போனை வாங்க முடியும் எனப்படுகிறது. போனுடன் மோட்டோரோலா வர்வ் இயர் பட்ஸும் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
மோட்டோரோலா சிறப்பம்சங்கள் (எதிர்பார்க்கப்படுபவை):
நானோ டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு ஒன் ப்ரோக்ராம், 6.3 இன்ச் ஸ்க்ரீன், எல்.சி.டி டிஸ்ப்ளே, 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 432 பிபிஐ பிக்சல் அடர்த்தி, 2.2GHz சாம்சங் எக்சினோஸ் 9609 ஆக்டா- கோர் ப்ராசஸர், 4ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பு வசதி உள்ளிட்ட வசதிகளை இந்த போன் பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது.
கேமரா பிரிவைப் பொறுத்தவரை போனின் பின்புறம் 48 மெகா பிக்சல் மற்றும் 25 மெகா பிக்சல் சென்சார்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். 3,500 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் இந்த போன் பவரூட்டப்பட்டிருக்கிறதாம். ப்ளூடூத் v5, Wi-Fi 802.11 ac, NFC, யூ.எஸ்.பி டைப் சி போர்ட் உள்ளிட்ட இணைப்பு வசதிகளை இந்த போன் பெற்றிருக்கலாம்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்