Photo Credit: TigerMobiles
மோட்டோரோலா நிறுவனம் சென்ற ஆண்டு ஐ.எப்.ஏ-வில் இரண்டு ‘ஆண்ட்ராய்டு ஒன்' ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஒன் வரிசையில் இன்னும் அதிக போன்களை மோட்டோரோலா வெளியிடும் என்று தற்போது தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் பிரபல போன் வல்லுநரான இவான் பிளாஸ், மோட்டோரோலாவின் அடுத்தடுத்த போன்கள் குறித்த பெயர்களை லீக் செய்துள்ளார். மோட்டோரோலா ஒன், மோட்டோரோலா ஒன் பவர், மோட்டோரோலா ஒன் விஷன், மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் ஆகிய போன்களே அடுத்ததாக மோட்டோரோலா நிறுவனத்தால் வெளியிடப்படும் என்று பிளாஸ் கூறுகிறார். இந்த 4 போன்களில் ஒன் மற்றும் ஒன் பவர் போன்கள், சென்ற ஆண்டு ஐ.எப்.ஏ-வில் வெளியிடப்பட்டது. இதில் மோட்டோரோலா ஒன்-தான் ப்ரீமியம் போன் ஆகும். அந்த போனில் கண்ணாடி பின்புற டிசைன் இருக்கும். இந்தியாவில் அது இன்னும் அறிமுகமாகவில்லை. ஆனால் ஒன் பவர் இந்திய சந்தைக்கு வந்தது. நல்ல திறன் கொண்ட பேட்டரிதான் அந்த போனின் ஹைலைட்.
Motorola One
— Evan Blass (@evleaks) April 17, 2019
Motorola One Power
Motorola One Vision
Motorola One Action
ஒன் விஷன் மற்றும் ஒன் ஆக்ஷன் போன்கள் தான் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கின்றன. ஒன் விஷன் போன், சாம்சங் எக்சினோ 9610 எஸ்.ஓ.சி-யால் பவரூட்டப்பட்டிருக்கும் என்றும், 21:9 முழு எச்.டி+ டிஸ்ப்ளேவைப் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிது. மேலும் 48 மேகா பிக்சல் முதன்மை கேமரா, டூயல் ரியர் கேமரா, 3,500 எம்.ஏ.எச் பேட்டரி உள்ளிட்ட வசதிகளையும் இந்த போன் பெற்றிருக்கக்கூடும் எனப்படுகிறது.
சீனாவில் இந்த விஷன் மாடல் போன், மோட்டோரோலா P40 என்ற பெயரில் வெளியிடப்படும் என்று தகவல். ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சி மூலம் இந்த போன் பவரூட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மோட்டோரோலா ஒன் ஆக்ஷன் போன் குறித்து இதுவரை பெரிதாக எந்தவித தகவலும் கசியவில்லை. ஆனால், போனின் பெயரை வைத்துப் பார்க்கும்போது கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் மிகவும் கறாரான பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் போன் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த மோட்டோரோலா போன்கள் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்